பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316

புறநானூறு - மூலமும் உரையும்


வல்லாண் பக்கம் என்பதற்கு இளம்பூரணரும், ‘அரும்பகை தாங்கும் ஆற்றல்’ என்பதற்கு நச்சினார்க்கினியரும் மேற்கோள் காட்டுவர் (தொல் புறத். சூ. 18, சூ 21)

எருது கால் உறாஅது, இளைஞர் கொன்ற சில்விளை வரகின் புல்லென் குப்பை, தொடுத்த கடவர்க்குக் கொடுத்த மிச்சில் பசித்த பாணர் உண்டு, கடை தப்பலின், ஒக்கல் ஒற்கம் சொலியத் தன்னுர்ச் 5 சிறுபுல் லாளர் முகத்தவை கூறி, வரகுகடன் இரக்கும் நெடுந்தகை அரசுவரின் தாங்கும் வல்லா ளன்னே.

எருதுகளின் காலால் மிதித்து எடுக்காது, இளைஞர்கள் தாமே மிதித்து எடுத்த விளைவுகுறைந்த வரகுக் குவியலில், கொடுக்கவேண்டிய கடமையுடையோர்க்குக் கொடுத்தது போக எஞ்சியதைப் பசியோடு வந்த பாணர்க்கு வழங்க, அவரும் கொண்டு சென்றனர். அதன்பின், அவனைச்சார்ந்த சுற்றத்தினர் பசியால் வாடாது காக்கும் பொருட்டுத் தன்னுரிலுள்ள மனவிரிவு அற்றவரிடம் சென்று, தனக்கு வேண்டும் வரகின் அளவினைக் கூறிக் கடனாகத் தர வேண்டிக் கேட்டு நிற்கும் இயல்புடையவன் அத் தலைவன். பெருவேந்தர் போரிலே எதிர்த்து வந்தாலும் தடுத்து வெல்லும் வல்லாண்மை உடையவனும் அவன் ஆவான்.

சொற்பொருள்: 3. தொடுத்த கடவர்க்கு - தொடர்ந்து வளைத்துக் கொண்ட கடன்காரர்க்கு எனவும் உரைப்பர். 4. கடைதப்பலின் - வெளியேறினராகப் புறங்கடை வறிதாகலின். 5. ஒற்கம் சொலிய - வறுமையைக் களைய வேண்டிய.

328. ஈயத் தொலைந்தன!

பாடியவர்: பெயர் தெரிந்திலது. திணை: வாகை. துறை: மூதின் முல்லை. -

("வரகும் தினையும் உள்ளவை எல்லாம் இரவன் மாக்களுக்கு ஈயத் தொலைந்தன எனத் தலைவனது கொடையாண்மை போற்றப் படுகின்றது. களவுப் புளி என்று புளிப்புத் தரும்

களாப்பழத்தின் பயனையும் கூறினார்)


டைமுதல் புறவு சேர்ந்திருந்த புன்பலச் சீறுர், நெல்விளை யாதே; வரகும் தினையும் உள்ளவை யெல்லாம் இரவன் மாக்களுக்கு ஈயத் தொலைந்தன;


see -- டமைந்தனனே, z 5