பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

317


அன்னன் ஆயினும், பாண! நன்றும், * வள்ளத் திடும்பால் உள்ளுறை தொட. களவுப் புளியன்ன விளை....


வாடுன் கொழுங் குறை கொய்குரல் அரிசியொடு நெய்பெய்து அட்டுத், 10

துடுப்பொடு சிவணிய களிக்கொள் வெண்சோறு

உண்டு, இனி திருந்தபின்....

- - - - - - - - தருகுவன் மாதோ

தாளிமுதல் நீடிய சிறுநறு முஞ்ஞை

முயல்வந்து கறிக்கும் முன்றில், - - 15

சீறுர் மன்னனைப் பாடினை செலினே.

தாளிமரத்தில் படந்துள்ள சிறிய மெல்லிய முன்னைக் கொடியை முயல் வந்து கறிக்கும் முற்றங்களையுடைய ஊரின் மன்னன் அவன். அவனைப் பாடிச் செல்க பாணனே! முல்லை நிலத்தைச் சார்ந்த அவ்வூரிலே நெல்லோ விளையாது; விளைந்த வரகும் தினையும் உள்ளவை முழுதும் இரவலர்க்குக் கொடுத்துத் தீர்ந்தன.அத்தகையோனும். பாணனே உறையிட்ட தயிரும் தொடரிப்பழமும் புளித்த கள்ளும். வெந்த தசைத் துண்டங்களுடனே, அரிசியுடன் நெய்யுங் கலந்து சமைத்துத் துடுப்பால் கிளறிக் களிப்புத்தரும் வெண்சோறும் தருவான். அவற்றைப் பசிதீர உண்டு இருந்த பின்னர்.தருவான்.

சொற்பொருள்: 8. களவுப் புளியன்ன விளை - களாப் பழத்தின் புளிப்பு ஏறிய, 10. கொய்குரல் அரிசியொடு கொய்யப்பட்ட கதிரிடத்துண்டான அரிசியொடு. 1. துடுப்பொடு சிவணிய துடுப்பால் துழாவப்பட்ட

329. மாப்புகை கமழும்!

பாடியவர்: மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார். திணை: வாகை. துறை: மூதின் முல்லை.

('புலவர் புன்கண் நோக்காது, இரவலர்க்கு அருகாது ஈயும் வண்மையாளனாகிய தலைவனைப் போற்றுகிறது செய்யுள். 'கல் நட்டுக் கால் கொண்டதற்கு நச்சினார்க்கினியர் எடுத்துக் காட்டுவர் (தொல், புறத்சூ, 5)

இல்லடு கள்ளின் சில்குடிச் சீறுர்ப்

புடைநடு கல்லின் நாட்பலி யூட்டி,

நன்னி ஆட்டி, நெய்ந்நறைக் கொளீஇய,

மங்குல் மாப்புகை மறுகுடன் கமழும்,

அருமுனை இருக்கைத்து ஆயினும், வரிமிடற்று 5