பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

21


15. எதனிற் சிறந்தாய்? பாடியவர்: நெட்டிமையார். பாடப்பட்டோன்: பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி திணை:பாடாண். துறை: இயன்மொழி. திணை:9, 6, 12 ஆவது செய்யுட்களையும் இதனோடு சேர்த்துக் கற்றறிக. . ,

(பாழ் செய்தனை', 'தேர் வழங்கினை': கயம் படியினை, வேள்வி பல செய்தனை' என இவை எல்லாம் செய்யும் இயல்பினன் எனக் கூறுதலால், இயன்மொழி வாழ்த்து ஆயிற்று. இனி இவை செய்தனை, இவையிற்றைத் தொடர்ந்து செய்தருள்க எனப் பொருள்முடிபு கொள்ளின் செவியறிவுறுஉம் ஆகும்) -

கடுந்தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண்,

வெள்வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டிப், பாழ்செய் தனை, அவர் நனந்தலை நல்லெயில்; புள்ளினம் இமிழும் புகழ்சால் விளைவயல், வெள்ளுளைக் கலிமான் கவிகுளம் புகளத் 5

தேர்வழங்கிணைநின் தெவ்வர் தெளத்துத்; துளங்கு இயலாற், பணை எருத்தின், பாவடியாற் செறல் நோக்கின், ஒளிறு மருப்பின் களிறு அவர காப் புடைய கயம் படியினை - 10

அன்ன சீற்றத்து அனையை, ஆகலின் விளங்கு பொன் எறிந்த நலங்கிளர் பலகையொடு

நிழல்படு நெடுவேல் ஏந்தி ஒன்னார் ஒண்படைக் கடுந்தார் முன்புதலைக் கொண்மார்,

நசைதர வந்தோர் பலர்கொல்? புரையில் - 15

நற் பனுவல் நால் வேதத்து . அருஞ் சீர்த்திப் பெருங் கண்ணுறை, நெய்ம்மலி ஆவுதி பொங்கப், பன்மாண் வியாச் சிறப்பின் வேள்வி முற்றி, 20

யூபம் நட்ட வியன்களம் பலகொல்? யாபல கொல்லோ பெரும! வார் உற்று விசிபிணிக் கொண்ட மண்கனை முழவின் பாடினி பாடும் வஞ்சிக்கு நாடல் சான்ற மைந்தினோய் நினக்கே? . 25 இந்த வழுதி பகைவர் நாடுகள் பலவற்றையும் அழித்தவன்; பல யாகங்களைச் செய்து புகழ் பெற்றவன்; விறலியர் போற்றிப்