பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

318

புறநானூறு - மூலமும் உரையும்


அரவுஉறை புற்றத்து அற்றே நாளும் புரவலர் புன்கண் நோக்காது, இரவலர்க்கு அருகாது ஈயும் வண்மை, உரைசால் நெடுந்தகை ஒம்பும் ஊரே.

வீட்டிலேயே தமக்கு வேண்டிய கள்ளை வடித்துக் கொள்ளும் சிலசில குடியினரே வாழ்வது; ஊரின் புறத்திலே நடுகல்லுக்குப் பலியூட்டி, நன்னீர் ஆட்டி, நெய் விளக்கு ஏற்றுவதால் எழும் புகை, மேகம் போலப் படர்ந்து தெரு வெல்லாம் மணக்கும் சிறப்புடையது; அத்தகைய முதன்மை யுடைய குடியிருப்பு அது. என்றாலும், அவன் வாழ்தலால் அரவு உறையும் புற்றினைப் போலப் பகைவர் நெருங்கவும் அச்சம் ஊட்டக் கூடியதாயிற்று. எந் நாளும் புலவர்கள் தமக்கு வண்மையுடையோன், புகழ்பெற்ற நெடுந்தகை, அவன் காத்து வருவதும் அவ்வூர் ஆகும்.

330. ஆழி அனையன்!

பாடியவர்: மதுரைக் கணக்காயனார். திணை: வாகை. துறை:

மூதின் முல்லை.

(பகைப்படைஞரின் முனைகெட, ஏந்துவாள் வலத்தன் ஒருவனாகித், தன்னிறந்து வாராமை விலக்கிய, மாண்புடை மறவனின் சிறப்பைக் கூறுகிறது செய்யுள். வஞ்சித் திணைத் துறைகளுள், வருவிசைப் புனலைக் கற்சிலைபோல, ஒருவன் தாங்கிய பெருமை`க்கு இளம்பூரணர் எடுத்துக் காட்டுவர் (தொல், புறத். சூ.7)

- வேந்துடைத் தானை முனைகெட நெரிதர

ஏந்துவாள் வலத்தன் ஒருவன் ஆகித் தன்இறந்து வாராமை விலக்கலின், பெறுங்கடற்கு ஆழி அணையன் மாதோ, என்றும், - பாடிச் சென்றோர்க்கு அன்றியும் வாரிப் 5 புரவிற்கு ஆற்றாச் சீறுர்த் தொன்மை சுட்டிய வண்மை யோனே. தன் வேந்தனின் படைமுனையானது, பகைவர் தாக்குதலால் உடைந்து போவது கண்டு, வலக்கையிலே வாள் ஏந்தியவனாக, ஒருவன் விரைந்து சென்று, தன்னைக் கடந்து பகைவர் எவரும் மேல் வாராதவாறு தடுத்து நின்று பெரும் போரிட்டுக் காத்தனன். அலையெறிக்கும் பெருங்கடலுக்குக் கரைபோன்று விளங்குபவன் அவன். பாடிச் சென்றவர்களுக்கு வேண்டுவன வழங்குவதும்