பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

321


பாய்ந்து அதனைக் கொல்வதினும் தப்பாது சென்று பாயும். (யானையைக் கொல்வது எனவே, யானைமேலிருப்போரையும் கொல்வது என்றதாகும்.)

333. தங்கினிர் சென்மோ புலவீர்!

பாடியவர்: பெயர் தெரிந்திலது. திணை: வாகை. துறை: மூதின் முல்லை.

(அனைத்தும் கொடுத்துத் தீர்ந்த காலத்தும், தன் இல்லத்தை நாடி வந்த இரவலர்க்கு, விதைத் தினையை உணவாக்கி அளிக்கும் மனைவியது சிறப்பினைக் கூறுகிறது செய்யுள். வேந்து தலைவரினும் உண்பது அதுவே என, அம் மறவனது மேம்பாட்டையும் உறைக்கின்றனர்)

நீருள் பட்ட மாரிப் பேருறை மொக்குள் அன்ன பொகுட்டுவிழிக் கண்ண, கரும்பிடர்த் தலைய, பெருஞ்செவிக் குறுமுயல் உள்ளுர்க் குறும்புதல் துள்ளுவன உகளும் தொள்ளை மன்றத்து ஆங்கண் படரின் 5 'உண்க என உணரா உயவிற்று ஆயினும், தங்கினிர் சென்மோ, புலவீர்! நன்றும்; . சென்றதற் கொண்டு, மனையோள் விரும்பி, வரகும் தினையும் உள்ளவை எல்லாம் | இரவல் மாக்கள் உணக்கொளத் தீர்ந்தெனக், 10 குறித்துமாறு எதிர்ப்பை பெறாஅ மையின், குரல்உணங்கு விதைத்தினை உரல்வாய்ப் பெய்து, சிறிது புறப்பட்டன்றோ விலளே; தன்னுர் வேட்டக் குடிதொறுங் கூட்டு. . ---------------------- உடும்பு செய் 15

பாணி நெடுந்தேர் வல்லரோடு ஊரா, வம்பணி யானை வேந்துதலை வரினும், உண்பது மன்னும் அதுவே, பரிசில் மன்னும், குருசில்கொண்டதுவே.

மன்றத்து வளைப்புறங்களிலே குறுமுயல்கள் துள்ளி விளையாடும் அவனுருக்குச் செல்லுங்கள்! உண்க’ எனச் சொல்லி உபசரிக்கும் நிலையற்ற போதிலும், அங்கே தங்கிச் செல்லலாம். புலவர்களே! சென்றதனால் நுமக்கு நன்மையே. உள்ள வரகும் தினையும் இரவன்மாக்கள் உண்டு உண்டு தீர்ந்தன. புது விளைவும் வரவில்லை; ஆயினும் கதிர் கொய்து உலர்த்தி வைத்த வித்தினையேனும் உரலிற் பெய்து குத்தி நுமக்கு உணவு