பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Heólų iš Gästséir + 325

ஆர்கலி யினனே, சோணாட்டு அண்ணல், கவிகை மண்ணாள் செல்வராயினும், வாள்வலத்து ஒழியப் பாடிச் சென்றாஅர் வரல்தோறு அகம் மலர........ ஈதல் ஆனா இலங்குதொடித் தடக்கைப் 5

பாரி பறம்பின் பணிச்சுனை போல, காண்டற்கு அரிய ளாகி, மாண்ட பெண்மை நிறைந்த பொலிவொடு, மண்ணிய துகில்விரி கடுப்ப நுடங்கித், தண்ணென அகிலார் நறும்புகை ஐதுசென்று அடங்கிய 10

கபில நெடுநகர்க் கமழும் நாற்றமொடு, மனைச்செறிந்தனளே, வாணுதல்; இனியே. அற்றன்றாகலின், தெற்றெனப் போற்றிக், காய்நெல் கவளம் தீற்றிக் காவுதொறும் கடுங்கண் யானை காப்பனர் அன்றி, - 15

வருதலானார் வேந்தர்; தன்னையர் பொருசமம் கடந்த உருகெழு நெடுவேல் குருதி பற்றிய வெருவரு தலையர்; மற்றுஇவர் மறனும் இற்றால், தெற்றென யாரா குவர்கொல் தாமே - நேரிழை 20

உருத்த பல் சுணங்கு அணிந்த மருப்புஇள வனமுலை ஞெமுக்கு வோரே?

ஆரவாரஞ் செய்யும் வீரக்கழல் புனைந்தவன்தான் சோழ நாட்டு மன்னன். மண்ணாளும் செல்வரே என்றாலும் எதிர்த்து வெற்றிகொள்ள எண்ணாதது பாரியின் மலை. வாளை விட்டு விட்டுக் கவிந்த கையினராகப் பாணரைப்போல் வேட்டு வந்தவர் பாடிச் சென்றனர். இரவலர் வரும்போது அகம் மலர்ந்து கொடுத்து மகிழ்பவனே பாரி. எனினும், பகைவரால் காணவும் இயலாதது பறம்பின் பணிச்சுனை, அச் சுனைபோலக் காண்பதற்கு அரியவளாயினாள் அவளும். பெண்மை நிறைந்து மாட்சிமைப் பட்ட தன் பொலிவோடு, அவ் வாணுதல் இவ்விடத்தேயே அடைத்துக் கிடந்தனள். நிலை இவ்வாறாகவே, வந்த வேந்தர் போரிட முனைந்தவராகக் காடுகளிலே தங்கித் தம் போர் யானைகளைக் கவளம் ஊட்டிப் பேணுவாராயினர். பாரி பால் மீண்டும் வேட்டு வரவே எண்ணவில்லை. இவளுடைய அண்ணன் மாரோ பொருசமம் பல கடந்த வெற்றிவேலைத் தாங்கிப் பகைவரின் குருதி தோய்ந்த தலைகளைக் கையிலே நாளும் கொண்டவராயினர், என்னே, இவர் வீரம், இருந்தவாறு!