பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328

புறநானூறு - மூலமும் உரையும்


340. அணித்தழை நுடங்க!

பாடியவர்: பெயர் தெரிந்திலது. திணை: காஞ்சி. துறை: மகட்பாற் காஞ்சி.

(தந்தை 'பெருங்கை யானை கரந்தையஞ் செறுவிற் பெயர்க்கும் பெருந்தகை மன்னர்க்குத் தன் மகளை வரைந் திருந்தனன்; அதனால், அவன் அவளைப் பிறர்க்குத் தர மறுப்பவே, அவளும் பலகாலம் மணமாகாதிருந்தனள், இதனைக் குறித்துக் கூறுகிறது செய்யுள்) -

அணித்தழை நுடங்க ஓடி, மணிப்பொறிக் குரலம் குன்றி கொள்ளும் இளையோள், மாமகள்.

  • - 6 ----------4--- லென வினவுதி, கேள், நீ எடுப்பவெ.
      • ------------ மைந்தர் தந்தை இரும்பனை அன்ன பெருங்கை யானை கரந்தையஞ் செறுவின் பெயர்க்கும் - பெருந்தகை மன்னர்க்கு வரைந்திருந் தனனே.

அணியாக விளங்கும் தழையாடை அசைய ஒடியோடிச், செம்மையும் புள்ளியும் தவழுங் குன்றிமணிகளைத் தொகுத்து வரும் இளையோளைக் காண்மின் இவள் ஒரு பெரிய இடத்துப் பெண்போலும்! யார் மகளோ எனக் கேட்கிறாயோ நீ? கேள்: இவள் தமையன்மார் படைக்கலங்களை எடுத்தால் அதற்கு எதிராக எவரும் படை எடுக்க அஞ்சுவர். இவள் தந்தையோ, பகைவர் யானைப் படைகளைத்தான் ஒருவனாகவே கரந்தைக் கொடி நிறைந்த விளைவயலிலே நின்று வென்ற, பெருந்தகை யாளனான ஒர் அரசிளைஞனுக்கு, இவளை வரைந்தும் இருக்கின்றான். (எனவே, ஏன் இவள் குறித்து எண்ணுகின்றாய்? என்பது கருத்து)

341. இழப்பது கொல்லோ பெருங்கவின்

பாடியவர்: பரணர். திணை: காஞ்சி. துறை: மகட்பாற் காஞ்சி.

(ஒரு கன்னியை வேட்டு வந்தான் ஓர் அரசகுலத்து இளைஞன். அவளுக்காகப் போர்க்களமும் புகுந்தான். 'அவன் வென்று அவளை மணப்பானோ! அன்றி வாரா உலகம் புகுவானோ என்று இரங்கிக் கூறுகின்றது செய்யுள். ‘நொச்சித் திணைத் துறைகளுள் ஒன்றாகிய, "மகண் மறுத்து மொழிதலுக்கும் இதன் பொருளமைதி பொருத்தம் உடையது. காண்க)