பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

329


வேந்துகுறை யுறவுங் கொடாஅன், ஏந்துகோட்டு அம்பூந் தொடலை அணித்தழை அல்குல், செம்பொறிச் சிலம்பின் இளையோள் தந்தை, எழுவிட்டு அமைத்த திண்நிலைக் கதவின் அரைமண் இஞ்சி நாட்கொடி நுடங்கும் . 5

YY L S L L L L L L YYYY L L L L L L L C C L S00S L 0zY00Y00 CYC00C L C C LSCCY

புலிக்கணத் தன்ன கடுங்கண் சுற்றமொடு, மாற்றம் மாறான், மறலிய சினத்தன், 'பூக்கோள்' என ஏஎய்க், கயம்புக் கனனே, - விளங்குஇழைப் பொலிந்த வேளா மெல்லியல், 10

சுணங்கணி வனமுலை, அவளொடு நாளை மணம்புகு வைகல் ஆகுதல் ஒன்றோ - ஆரமர் உழக்கிய மறம்கிளர் முன்பின், நீள் இலை எஃகம் மறுத்த உடம்பொடு வாரா உலகம் புகுதல் ஒன்று - எனப் 15

படைதொட் டனனே, குருசில்; ஆயிடைக் களிறுபொரக் கலங்கிய தண்கயம் போலப், பெருங்கவின் இழப்பது கொல்லோ, மென்புனல் வைப்பின்இத் தண்பனை ஊரே!

வேந்தன் வந்து இரந்தும் கொடாது, இவள் தந்தையோ ‘போர்க்கு எழுக’ எனத் தன் படைஞருக்கு ஆணையிட்டவனாகத், தானும் நீராடச் சென்றுள்ளனன். போர்க்கான முயற்சிகள் பலவும் நிகழ்கின்றன. இவளை நாடிவந்த வேந்தனோ, "ஒன்று, நாளைப் போரில் இவள் தந்தையை வென்று இவளை மணந்து அணைவேன்; அல்லது போர்ப்புண்பட்டு மீண்டு வராத உலகம் புகுவேன்” என்று வஞ்சினம் கூறித் தன் படையோடும் நகரை முற்றுகையிட்டனன். களிறுகள் தம்முட் பொருது நீராடக் கலங்கிய குளம்போல, இவ்விருவரும் போரிடும் அறியாமையால், வளமிக்க இவ்வூரும் நாளைத் தன் அழகை இழந்து விடுமோ?

342. வாள்தக உழக்கும் மாட்சியர்!

பாடியவர்: அரிசில் கிழார் திணை: காஞ்சி, துறை: மகட்பாற் காஞ்சி.

இளைஞன் ஒருவன், ஓர் அரச கன்னியைக் கண்டு காதல் கொண்டனன். அவளுக்காக முன்னர்ப் போரிட்டு வந்தோர் பலர்; அவர்கள் அனைவரையும் வென்றனர் அவள் அண்ணன்மார்; அவளையோ நீயும் விரும்பினை என, அவனுக்கு அறிவுரை சொல்வதுபோல அமைந்துள்ளது செய்யுள்)