பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

332

புறநானூறு - மூலமும் உரையும்


பண்பில் ஆண்மை தருதல் ஒன்றோ, இரண்டினுள் ஒன்றா காமையோ அரிதே, காஞ்சிப் பணிமுறி ஆரங் கண்ணி - கணிமே வந்தவள் அல்குல்அவ்வரியே.

இவளை அடைய வேண்டுமாயின், நீவிர் செய்யக்கூடியன இரண்டுள் ஒன்றே! நெல் கவர்ந்துண்ணும் மயிலினத்தைச் செறிவளை மகளிர் வெருட்ட, அது பறந்து எழுந்து துறைக்கு அண்மையிலிருக்கும் மருத மரத்திலே தங்கும் வளமான ஊர்களையும், சிறந்த பொன்களையும் இவள் தந்தையிடம் தந்து இவளை வேண்டிப் பெறுவது ஒன்று; அன்றிப் பகை செய்தவராக, ஊர்களிலே எரிபரப்பி அருட்பண்பிலாத பேராண்மை காட்டி வென்று வசப்படுத்தல் மற்றொன்று. இருவரும் வளமும் போர் மறமும் மிகுந்தாரானதால் இரண்டினுள் ஒன்று ஆகுதலும் அரிதே! எனவே எண்ணிச் செய்வீராக!

345. பன்னல் வேலிப் பணை நல்லூர்!

பாடியவர்: அடைநெடுங் கல்வியார். பாடப்பட்டோன்: தெரிந்திலது. திணை: காஞ்சி. துறை: மகட்பாற் காஞ்சி.

('செல்வத்தை வேண்டார்; நிரல். அல்லோர்க்குத் தரல் இல்’ எனப் போர்வேட்டு வஞ்சினம் கூறிக் காத்திருக்கின்றனர் இவள் தமையன்மார்; இனி இவ்வூர்தான் என்னாகுமோ? என வருந்துகின்றார் புலவர்)

களிறு அணைப்பக் கலங்கின, காஅ; தேர்ஓடத் துகள் கெழுமின, தெருவு: மா மறுகலின் மயக்குற்றன, வழி, கலங் கழாஅலின், துறை கலக்குற்றன; தெறல் மறவர் இறை கூர்தலின் 5

பொறை மலிந்து நிலன் நெளிய,

வந்தோர் பலரே, வம்பவேந்தர், பிடி உயிர்ப் பன்ன கைகவர் இரும்பின் ஓவுறழ் இரும்புறம் காவல் கண்ணிக், கருங்கண் கொண்ட நெருங்கல் வெம்முலை, 10 மையல் நோக்கின், தையலை நயந்தோர் அளியர் தாமே; இவள் தன்னை மாரே; செல்வம் வேண்டார், செருப்புகல் வேண்டி, 'நிரல்அல்லோர்க்குத் தரலோ இல் எனக் கழிப்பிணிப் பலகையர், கதுவாய் வாளர்; 15