பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

334

புறநானூறு - மூலமும் உரையும்



பயிற்சியும், அறிவும் நிரம்பியவனாவன். யானும் ஒரு கல்வியேன்” என்று சொல்லும் பணிந்த இயல்பும் உடையவன். ஒளிபொருந்திய வேலுடன் பேராற்றலிலும் சிறந்தவன் இவள் தந்தை. அழிந்தவர் போக இருந்தவர் எம் சுற்றம் என்ற போர் மறம் உள்ளவர் இவனது மந்திரச் சுற்றத்தினர். அதனால், இவள் அழகு இவ்வூர் ஆடவர் பலரையும் அழித்தலால், நாட்டைக் காப்பவரே எவரும் இல்லாது போகப், பேணுவாரற்ற வெறும் பாழிடமாகவே இதனை ஆக்கிவிடும் போலும்!

347. வேர் துளங்கின மரனே! பாடியவர்: கபிலர் திணை: காஞ்சி. துறை: மகட்பாற் காஞ்சி.

(வேந்தர்கள் வந்து ஊரை முற்றினர்; அவரது போர் யானைகளைப் பிணித்தலால், ஊரிடத்து மரங்கள் வேர் துளங்கின எனக் கூறி, அம் மகளுக்கு அவள் தந்தை ஏற்ற மணவாளனை நாடிப் பிறரை மறுத்தொதுக்கிய செய்தியைக் கூறுகின்றார் கபிலர்)

உண்போன் தான்நறுங் கள்ளின் இடச்சில நாவிடைப் பஃறேர் கோலச் சிவந்த ஒளிறுஒள் வாடக் குழைந்தபைந்தும்பை, எறிந்துஇலை முறிந்த கதுவாய் வேலின், மணநாறு மார்பின், மறப்போர் அகுதை 5

குண்டுநீர் வரைப்பின், கூடல் அன்ன குவைஇருங் கூந்தல் வருமுலை சேப்ப

என்னா வதுகொல் தானே?... விளங்குறு பராரைய வாயினும், வேந்தர் • 10

வினைநவில் யானை பிணிப்ப, வேர்துளங் கினநம் ஊருள் மரனே.

- இறைச்சியும் மதுவும் உண்பான் ஒருவன், துணுக்கைகள் பல்லிடைச் சிக்க, நாவினால் துழாவி எடுத்தனன். அதனால் அந் நாவும் சிவந்தது. ஒளிபொருந்திய சிறந்த வாள்கொண்டு வெம்மையான போர் செய்தலாற் சிவந்ததும்பை மாலையினையும், பகைவர்மீது எறிந்து வடுப்பட்ட வேலினையும், சாந்தணிந்த மார்பினையும் உடையவன் மறப்போர் வல்ல ‘அகுதை”. அம் மன்னனது கூடல்நகரின் கண்ணுள்ள ஆழ்ந்த நீர்நிலைகளைப் போன்று கருத்தடர்ந்த கூந்தலுடையாள் இவள். இவளது தனங்கள் சிவக்குமாறு தழுவி மகிழ்பவன் யாவனோ தந்தையும் மகட்கொடை நேராது போர்க்கு எழுந்தனவே! நம் ஊர் மரங்கள்