பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

23


வினை மாட்சிய விரை புரவியொடு, மழை யுருவின தோல் பரப்பி, - முனை முருங்க்த் தலைச்சென்று, அவர் விளை வயல் கவர்பு ஊட்டி, - மனை மரம் விறகு ஆகக் 5

கடி துறைநீர்க் களிறு படீஇ

எல்லுப்பட இட்ட சுடுதீ விளக்கம்

செல்சுடர் ஞாயிற்றுச் செக்கரின் தோன்றப், புலம்கெட'இறுக்கும் வரம்பில் தானைத்,

துணை வேண்டாச் செரு வென்றிப், - 10 புலவுவாள் புலர் சாந்தின்

முருகன் சீற்றத்து, உருகெழு குருசில்

மயங்கு வள்ளை, மலர் ஆம்பல்,

பனிப் பகன்றைக் கணிப் பாகல்,

கரும்பு அல்லது காடு அறியாப் - . 15

பெருந் தண்பணை பாழ் ஆக,

ஏமநன் னாடு ஒள்ளி ஊட்டினை,

நாம நல்லமர் செய்ய, . .

ஒராங்கு மலைந்தன, பெரும நின்களிறே,

இக் கிள்ளியிடத்தே ஆற்றல்மிக்க பெரும்படை யொன்று இருந்தது. பகைவர் நாட்டை விரைந்து குதிரைமேற் சென்று வென்று, அவர்தம் நெல்விளையும் கழனியைக் கொள்ளையிட்டு, வீடுகளை இடித்து எரியூட்டிக், காவற்குளங்களில் யானைகளை இறக்கி அழித்துக், கொடும்போரியற்றும் திறம் மிகுந்தது அப்படை அது சென்ற பகைவர் நாடு சுடுநெருப்பால் வெந்து செக்கர் வானைப்போலச் செந்தீ ஒளிபரப்பிக் கொண்டிருக்கும். 'துணை வேண்டாது தனித்தே போரிடும் பெரிய படையினது வலுவும், புலால் நாற்றம் நாறும் கொலைவாளும், பூசிப் புலர்ந்த சாந்தும், முருகனைப் போன்ற வெஞ்சினமும் உடைய அச்சம் ஊட்டுந் தலைவனே! வளமிகுந்த நல்ல நாட்டை, நின்னோடு மாறுபட்டவர் நாடுஎன்பதற்காக இவ்வாறு எரியூட்டிக்கொடுமை செய்தனையே! நின் குதிரைப்படையுடன் சேர்ந்து களிற்றுப் படையும் அழித்தனவே!” (எனினும், புலவர்பால் மட்டும் நீ அன்புடையாய் என, அவன் போர் வீரத்தையும் வண்மையையும் புகழ்ந்தது இது) -

சொற்பொருள்: 1. தோல் - பரிசை.3.முருங்க கலங்க.4. கவர்பு ஊட்டி-கொள்ளையூட்டில் கடிதுறை-காவற் பொய்கை உண்ணு