பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

338

புறநானூறு - மூலமும் உரையும்


படுமணி மருங்கின் பணைத்தாள் யானையும் கொடிநுடங்கு மிசைய தேரும், மாவும், படைஅமை மறவரொடு துவன்றிக் கல்லெனக், கடல்கண் டன்ன கண்அகன் தானை வென்றுஎறி முரசின் வேந்தர், என்றும், 5 வண்கை எயினன் வாகை. அன்ன இவள்நலம் தாராது அமைகுவர் அல்லர்; என்ஆவதுகொல் தானே - தெண்ணிப் பொய்கை மேய்ந்த செவ்வரி நாரை தேம்கொள் மருதின் பூஞ்சினை முனையின், 10

காமரு காஞ்சித் துஞ்சும் ஏமம்சால் சிறப்பின், இப் பணைநல் லூரே?

யானைகளும், தேரும், குதிரைகளும், படைமறவரோடும் நெருங்கிக் கல்லென்ற ஒலியோடு முழங்கும் கடல்போல வரும் தானைக்கு உரிய முரசு முழங்கும் மூவரும், வள்ளல் எயினனின் வாகைநகர் போன்ற இவளது பெறுதற்கரிய நலத்தினை இவள் தந்தை தராது மறுப்பின், அமைந்து வாளாது இரார். பொய்கையின் மீன்களை மேய்ந்த நாரையானது மருத மரத்தின் கிளைகளிலே தங்க விரும்பவில்லையானால், காஞ்சி மரத்தி லாவது சென்று உறங்கும் காவற் சிறப்புடைய வளமிக்க இம் மருதநிலத்து ஊர், இனி என்ன வாகுமோ?

352. தித்தன் உறந்தை யன்ன!

பாடியவர்: பரணர். திணை: காஞ்சி. துறை: மகட்பாற் காஞ்சி. குறிப்பு: இடையிடைச் சிதைவுற்ற செய்யுள் இது. சிறப்பு: தித்தன் காலத்து உறந்தையின் நெல் வளம்.

('மகள் தர மறுத்தலால் வந்தெய்தும் பகைவரது

முற்றுகையை நினைந்து வருந்திக் கூறும் செய்யுள் இதுவும்)

தேஎங் கொண்ட வெண்மண்டையான்,

வீ. கறக்குந்து,

அவல் வகுத்த பசுங் குடையான்,

புதன் முல்லைப் பூப்பறிக் குந்து

ஆம்பல் வள்ளித் தொடிக்கை மகளிர் 5

குன்று ஏறிப் புனல் பாயின்

புற வாயால் புனல்வரை யுந்து;

- - - - - 4 & 8 & B o 'o - - - - - - நொடை நறவின்

மாவண் தித்தன் வெண்ணெல் வேலி

உறந்தை அன்ன உரைசால் நன்கலம் 10