பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

341


வீங்குஇறைப் பணைத்தோள், மடந்தை மான்பிணை யன்ன மகிழ்மட நோக்கே? - 10

'முடிவேந்தரே படையெடுத்து வரினும் அடங்காததான நிறைத்த காம்பணிந்த வேலினை நீர்ப்படை செய்வதற்காகச் சான்றாண்மையுடைய சிறந்த வீரர்கள் வந்து சேர்ந்தனர் எனக் கூறி, இவள் தந்தையும் செல்கின்றனனே! வயற்புறத்திலுள்ள குளத்திலே கயல்மீனைத் தின்றும் அமையாத நாரையானது, வாளை மீனைத் துரத்த, அதனை நீராடும் மகளிர் பற்றித் தம் வீட்டுக்குக் கொண்டுவரும் வளமிக்கது இவ்வூர். இவ்வூரின் அழகுகெடப்போரும் வந்துவிடுமோ? எல்லாம், சுணங்கு அணிந்து உயர்ந்து அண்ணாந்த இளைய முலைகளையும், பெருத்த தோள் களையும் உடைய இம் மடந்தையின் மான்பிணையன்ன மகிழ்ந்த மடநோக்கின் விளைவே யன்றோ இனி யாதாகுமோ?

355. ஊரது நிலைமையும் இதுவே?

பாடியவர்: பெயர் தெரிந்திலது. திணை: காஞ்சி. துறை: தெரிந்திலது. முற்றக் கிடையாது போயின செய்யுள் இது.

(அழிவெய்திய ஒர் ஊரினது நிலையினைக் கூறுகின்றன. கிடைத்தவரை உள்ள பகுதி)

மதிலும் ஞாயில் இன்றே; கிடங்கும், நீஇர் இன்மையின், கன்றுமேய்ந்து உகளும்; ஊரது நிலைமையும் இதுவே:

S S S S S S S S S S S S S CS S S S S S S S S S S S S S

மதில்களும் கொத்தளங்களும் சிதைந்தன. அகழ்களும் நீரின்றிப் போயினமையின், அங்கு எஞ்சிய சேற்றிலே முளைத்த புல்லைக் கன்றுகள் மேய்ந்து திரிகின்றன. முன்னைய போருக்குப் பின் ஊரின் நிலைமை இதுவே. இவற்றை எண்ணாது இவள் தந்தையும் மயங்கி இருக்கின்றான். இவள் தமையன்மாரும் அவ்விதமே!

356. காதலர் அழுத கண்ணி!

பாடியவர்: தாயங்கண்ணனார். திணை: காஞ்சி. துறை:

பேருங்காஞ்சி.

(காட்டை வாழ்த்துதலின் மூலம், உலகின் நிலையாமையைக் கூறுகின்றது செய்யுள். அதனால், பெருங்காஞ்சி என்று கொள்க. 'காடு வாழ்த்து' என்னும் துறைக்கு இளம்பூரணர் எடுத்துக் காட்டுவர் (தொல். புறத். சூ. 19). மணிமேகலையுள் வரும் சக்கரவாளக் கோட்டம் உரைத்த காதையின் பகுதிகளோடு