பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

342

புறநானூறு - மூலமும் உரையும்


ஒப்பிட்டுக் கண்டு, இதன் பொருட்செறிவையும் உணர்ந்து போற்றுக)

களரி பரந்து, கள்ளி போகிப், பகலும் கூஉம் கூகையொடு, பிறழ் பல் ஈம விளக்கின், பேஎய் மகளிரொடு அஞ்சுவந் தன்று, இம் மஞ்சுபடு முதுகாடு நெஞ்சமர் காதலர் அழுத கண்ணி 5 என்புபடு சுடலை வெண்ணிறு அவிப்ப, எல்லார் புறனும் தான்கண்டு, உலகத்து மன்பதைக் கெல்லாம் தானாய்த் தன்புறம் காண்போர்க் காண்புஅறியாதே.

களர் நிலம் பரந்து, கள்ளிகள் மிகுந்து, பகலினும் கூகைகள் கூவுமாறு இருள் அடர்ந்து, பிளந்த வாயுடைய பேய்மகளும் ஈமத்தீயும் நிறைந்து, புகை படர்ந்த இம் முதுகாடு, மனங் கலந்த காதலர்கள் அழுது அழுது பெருக்கிய கண்ணிரால், சுடலையிலே வெந்து நீரான சாம்பலை அவிக்கவுமாக விளங்குகிறது. தன்னை எதிர்த்த எல்லாரையும் வெற்றி கண்டு, உலக உயிர்களுக்கெல்லாம் தானே முடிவிடமாய் விளங்குவது; தன்னைப் புறங்கண்டு மீள்வோரை என்றும் கண்டறியாதது அது. (மகள் மறுத்தலால் நேரும் பேரழிவினைக் காட்ட முதுகாட்டைப் பற்றிக் கூறுவது இது)

357. தொக்குயிர் வெளவும்! பாடியவர்: பிரமனார். திணை: காஞ்சி. துறை: பெருங்காஞ்சி.

(இது நிலையாமை பற்றி மிகவும் திட்பமாக எடுத்துக் கூறுகின்றது. ‘வாழுங் காலத்தில் தானே புகழ்தரத் தகுவன செய்யாதவன், சாகும்காலத் தெல்லையில் வருந்துவது ஏனோ? என்கின்றனர். இக்கரை நின்று இவர்ந்து உக்கரை கொளல்’ என்றது, வீட்டுலகப் பேறு பற்றிய சிந்தனையின் பழமையை வலியுறுத்தும்)

- குன்றுதலை மணந்த மலைபிணித் தியாத்தமண்,

பொதுமை சுட்டிய மூவர் உலகமும், பொதுமை இன்றி ஆண்டிசி னோர்க்கும், மாண்டவன்றே ஆண்டுகள்; துணையே வைத்த தன்றே வெறுக்கை; 5

始部* - *é* *●●●4岭《 ●●-●够修锦始●●●●●●钟* - 曾● 峻神* * 6ö)6öðT புணைகை விட்டோர்க்கு அரிதே, துணைஅழத்,