பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

344

புறநானூறு - மூலமும் உரையும்


சேர்ந்திருக்கும். அஃதன்றி, வாழ்வை வெறுத்தலை விடா தோர்பால் செல்வமும் சேராது; அவர் இன்புறுவதும் இலர்.

இப் பாடலின் கருத்து இராமாயணக் கதையைக் குறிக்கும் என்பர் சில ஆராய்ச்சியாளர்கள்.

359. நீடு விளங்கும் புகழ்!

பாடியவர்: கரவட்டனார். பாடப்பட்டோன் : அந்துவன் கீரன்.

திணை: காஞ்சி. துறை: பெருங்காஞ்சி.

(தலைவனுக்கு நிலையாமையின் தன்மையை உணர்த்தி, அதனால் கொடையாற் புகழ்பெற்று உய்யுமாறு அறிவுறுத்து கின்றார் புலவர். ஆண்டு நீ பெயர்ந்த பின்னும், ஈண்டு நீ எய்திய புகழ் நீடு விளங்கும் என்கிறார்; சிறந்த உறுதி இது)

பாறுபடப் பறைந்த பன்மாறு மருங்கின், வேறுபடு குரல வெவ்வாய்க் கூகையொடு பிணந்தின் குறுநரி நிணம்திகழ் பல்ல, பேஎய் மகளிர் பிணம்தழுஉப் பற்றி, விளர்ஊன் தின்ற வெம்புலால் மெய்யர் 5

களரி மருங்கில் கால்பெயர்த் தாடி, ஈம விளக்கின் வெருவரப் பேரும் காடுமுன் னினரே, நாடுகொண்டோரும்! நினக்கும் வருதல் வைகல் அற்றே; வசையும் நிற்கும்; இசையும் நிற்கும்; 10 அதனால் வசைநீக்கி இசை வேண்டியும், நசை வேண்டாது நன்று மொழிந்தும், நிலவுக் கோட்டுப் பலகளிற் றொடு, பொலம் படைய மா மயங்கிட, இழைகிளர் நெடுந்தேர் இரவலர்க்கு அருகாது 15 'கொள்' என விடுவை யாயின், வெள்ளென ஆண்டுநீ பெயர்ந்த பின்னும், ஈண்டுநீடு விளங்கும், நீ எய்திய புகழே! நாடுகொண்ட பெருமன்னரும் முடிவிலே முது காட்டையே அடைந்தனர்.நினக்கும் அது வருதல் உறுதியேயாகும். இவ்வுலகில் ஒருவன் செய்த வசையும் இசையுமே நிற்பன. அதனால், வசையை நீக்கி இசையையே விரும்புவாயாக கைக்கூலி வேண்டாது நன்றே சொல்வாயாக. களிறும், குதிரையும், தேரும் இரவலர்க்கு ‘வரையாது கொள்க’ எனத் தருவாயாக. தந்தால், நீ இடுகாடு