பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

345


அடைந்த பின்னும், நீ எய்திய புகழானது, இவ்வுலகத்திலே நெடுங்காலம்வரை நிலைத்து நிற்கும்! -

சொற்பொருள்: 1. பாறுபடப் பறைந்த - கெட்டுத் தேய்ந்து அழிந்த பல்மாறு மருங்கின் பல சுள்ளிகள் கிடக்கின்ற பக்கத்தில். 2. வெவ்வாய்க் கூகையொடு - வெவ்விய வாயையுடைய கூகையொடு கூடி 17. பின்னும் - மேலுலகத்துச் சென்ற பின்னரும்.

360. பலர் வாய்த்திரார்!

பாடியவர்: சங்க வருணர் என்னும் நாகரியர். திணை: காஞ்சி. துறை: பெருங்காஞ்சி.

(செல்வத்தின் நிலையாமையையும், வாழ்க்கையின் நிலையாமையையும் உணர்த்தி, அறநெறி வாழ்விற் செல்லுமாறு வலியுறுத்த முற்படுகின்றார் புலவர்)

பெரிது ஆராச் சிறு சினத்தர்

சில சொல்லால் பல கேள்வியர், நுண் ணுணர்வினாற் பெருங் கொடையர் கலுழ் நனையால் தண் தேறலர் கனி குய்யாற் கொழுந் துவையர், - 5

தாழ் உழந்து தழுஉ மொழியர் பயன் உறுப்பப் பலர்க்கு ஆற்றி ஏமமாக இந்நிலம் ஆண்டோர் சிலரே பெரும கேள் இனி, நாளும், பலரே தகைஅஃது அறியா தோரே! 10 அன்னோர் செல்வமும் மன்னி நில்லாது; இன்னும் அற்று, அதன் பண்பே, அதனால் நிச்சமும் ஒழுக்கம் முட்டிலை; பரிசில் நச்சுவர் கையின் நிரப்பல் ஓம்புமதி, அச்சுவரப் - பாறுஇறை கொண்ட பறந்தலை, மாகத 15 கள்ளி போகிய களரி மருங்கின், வெள்ளில் நித்த பின்றைக் கள்ளொடு புல்லகத்து இட்ட சில்லவிழ் வல்சி, புலையன் ஏவப் புன்மேல் அமர்ந்துண்டு, அழல்வாய்ப் புக்க பின்னும், 20 பலர்வாய்த்து இராஅர், பகுத்துஉண்டோரே?

ஆராத பெருஞ்சினமன்றி எளிதே மாறும் சிறுசினம் உடையவரும், சில சொல்லிப் பல கேட்கும் அறிவு உடையோரும்,