பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

350

புறநானூறு - மூலமும் உரையும்



(நிலையாமை கூறி அறநெறி மேற்கொள்ளலை வலியுறுத்துகின்றது செய்யுள். 'உண்டும் தின்றும் இரப்போர்க்கு ஈய்ந்தும் மகிழ்கம் வம்மோ என்று அழைக்கின்றார் புலவர்)

வாடா மாலை பாடினி அணியப், பாணன் சென்னிக் கேணி பூவா எரிமருள் தாமரைப் பெருமலர் தயங்க, மைவிடை இரும்போத்துச் செந்தீச் சேர்த்திக், தாயங் கனிந்த கண்ணகன் கொழுங்குறை 5 நறவுண் செவ்வாய் நாத்திறம் பெயர்ப்ப உண்டும், தின்றும், இரப்போர்க்கு ஈய்ந்தும் மகிழ்கம் வம்மோ, மறப்போ ரோயே! அரிய வாகலும், உரிய பெரும! - நிலம்பக வீழ்ந்த அலங்கல் பல்வேர் 10 முதுமரப் பொத்தின் கதுமென இயம்பும் கூகைக் கோழி ஆனாத் தாழிய பெருங்கா டெய்திய ஞான்றே.

மறப்போர் வல்ல எம் தலைவனே! பாடினி பொன்னரி மாலை யணியவும், பாணன் பொற்றாமரைப்பூச் சூடவும், ஆட்டுக்கிடாவை நெருப்பிலிட்டுப் பக்குவமாக வெந்த இறைச்சியும் கள்ளும் உண்டு, அவர்தம் நாவின் திறமெல்லாம் காட்டிப் பாட நாளும் உண்டும் தின்றும் இரவலர்க்குத் தந்தும் மகிழலாம் வருக! இறந்தோர் உடல்களை இட்டுப் புதைத்ததும், முதுமரப் பொந்திலே கூகைக்கோழி இருந்து கூவுவதுமான இடுகாட்டை அடைந்தபின், இஃதெல்லாம் செய்வதற்கு அரியன, பெருமானே; இதனை நீ அறிவாயாக!

சொற்பொருள்: 12. கூகைக் கோழி - பேராந்தை கோட்டான் என்பர். கூகை கூவுதலை "பொத்த வரையுட் பேழ்வாய்க் கூகை சுட்டுக் குவி எனச் செத்தோர்ப் பயிரும் (புறம் 240) என்றலும் காண்க.13. தாழி - பிணங்களைக் கவிக்கும் தாழி; இதனை முதுமக்கள் தாழி என்பர். -

365. நிலமகள் அழுத காஞ்சி!

பாடியவர்: மார்க்கண்டேயனா திணை: காஞ்சி. துறை: பெருங்காஞ்சி.

('நிலையாமையை மிகவும் அழுத்தமாக வலியுறுத்துகின்றது இச் செய்யுள் விலைநலப் பெண்டிரிற் பலர் மீக் கூற என்பது, அவர்தம் ஒழுகலாற்றைக் காட்டும். நிலமகள் அழுத காஞ்சி' என்பது சிறந்த கற்பனை)