பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

356

புறநானூறு - மூலமும் உரையும்


விழுத்தலை சாய்த்த வெறுவரு பைங்கூழ்ப், பேய்மகள் பற்றிய பிணம்பிறங்கு பல்போர்பு, 15

கணநரியோடு கழுதுகளம் படுப்பப் பூதங் காப்பப் பொலிகளந் தழீஇப், பாடுநர்க்கு இருந்த பீடுடையாள! தேய்வை வெண்காழ் புரையும் விசிபிணி வேய்வை காணா விருந்தின் போர்வை 20

அரிக்குரல் தடாரி உருப்ப ஒற்றிப்,

பாடி வந்திசின் பெரும, பாடான்று

எழிலி தோயும் இமிழிசை யருவிப்,

பொன்னுடை நெடுங்கோட்டு, இமையத் தன்ன

ஓடை நுதல, ஒல்குதல் அறியாத் , 25

துடியடிக் குழவிய பிடியிடை மிடைந்த

வேழ முகவை நல்குமதி,

தாழா ஈகைத் தகைவெய்யோயே!

இருப்புப்பூண் பூட்டிய மருப்பினையுடைய யானைகள் மேகமாகவும், மறவர்கள் ஓங்கிய வாள் மின்னலாகவும், முரசுகள் இடிமுழக்கமாகவும், விரைந்து செல்லும் குதிரைகள் காற்றாகவும், வில்லிலிருந்து பாய்ந்து வரும் கணைகள் மழைத்துளி பொழிவது போலவும் அரசர்கள் போரிடும் பொழுதிலே, அங்கே விளங்கும் குருதி வீழ்ந்து சேறாகிப்போன அக் களத்திலே, தேர் ஏராகச் சுற்றி, நின் படைவீரர் சால் பிடித்து வேலும் கணையமும் கொண்டு வித்தி, விழுத்தலை சாய்ந்த கொடுங்களம் என்னே! அதன்கண் பாடுவோர்க்கு அருளுடன் இருந்து உதவும் பெருமை யுடையோனே தடாரிப்பறை முழக்கிநின்னைநாடியான் வந்தேன். என் வறுமை தீரக் கன்றும் பிடியும் விரவிய, இமையம் போன் உயர்ந்த களிறுகளைப் பரிசிலாக நல்குவாயாக! -

யானைகள் முதலியவற்றை மழை முதலியவாக உருவகம்

செய்திருத்தலின், இச் செய்யுள் உருவக அணியாகும்.

370. பழுமரம் உள்ளிய பறவை! -

பாடியவர்: ஊன்பொதி பசுங்குடையார். பாடப்பட்டோன்: சோழன் செருப்பாழி இறிந்த இளஞ்சேட் சென்னி. திணை: வாகை துறை: மறக்களவழி.

(இதுவும் போர்க்களத்து நிகழ்ச்சிகளை ஏர்க்களத்து நிகழ்ச்சிகளோடு ஒப்புமை காட்டி, அரசனை உழவனாகப் பாடிய செய்யுள் ஆகும்.சோழனிடம் களிற்றைப்பரிசிலாகக் கேட்கின்றார்