பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

357


புலவர். களங் கிழவோய்' என்றதுவென்றவன் சோழன் என்பதனை விளக்கும், களத்தினது உரிமை வென்றோனுக்கே ஆதலால்)

“”.வி, நாரும் போழும் செய்துண்டு, ஒராங்குப் பசிதினத் திரங்கிய இரும்பே ரொக்கற்கு ஆர்பதம் கண்ணென மாதிரம் துழைஇ வேர்உழந்து உலறி, மருங்கு செத்து ஒழியவந்து, 5

அத்தக் குடிஞைத் துடிமருள் தீங்குரல் உழுஞ்சில்அம் கவட்டிடை இருந்த பருந்தின் பெடைபயிர் குரலொடு இசைக்கும் ஆங்கண் கழைகாய்ந்து உலறிய வறங்கூர் நீள்இடை, வரிமரல் திரங்கிய கானம் பிற்படப், 10

பழுமரம் உள்ளிய பறவை போல, ஒண்படை மாரி வீழ்கணி பெய்தெனத், துவைத்தெழு குருதி நிலமிசைப் பரப்ப, விளைந்த செழுங்குரல் அரிந்து, கால் குவித்துப் படுபிணப் பல்போர்பு அழிய வாங்கி 15

எருதுகளி றாக, வாள்மடல் ஒச்சி

அதரி திரித்த ஆளுகு கடாவின், அகன்கண் தடாரி தெளிர்ப்ப ஒற்றி வெந்திறல் வியன்களம் பொலிக!' என்று ஏத்தி இருப்புமுகம் செறித்த ஏந்துஎழில் மருப்பின் 20

வரைமருள் முகவைக்கு வந்தனென்; பெரும; வடிநவில் எஃகம் பாய்ந்தெனக், கிடந்த தொடியுடைத் தடக்கை ஓச்சி, வெருவார் இனத்துஅடி விராய வரிக்குடர் அடைச்சி அழுகுரற் பேய்மகள் அயரக், கழுகொடு 25

செஞ்செவி எருவை திரிதரும்,

அஞ்சுவரு கிடக்கைய களங்கிழவோயே! (1. வள்ளியோர்க் காணாது உய்திறன் உள்ளி எனவும் உரைப்பர்) . பகைவரைக் கொன்று அழித்தவனாகப், போர்க்களத்திலே பேய்மகள் குரவையாடப், பருந்தும் கழுகும் இருந்து பிணங்களைத் தின்ன, வெற்றியாற் சிறந்தவனாக வீற்றிருக்கும் மன்னர் பெருமானே! என் சுற்றமும் யானும் பசியால் உழன்று, மருங்கு செத்து ஒழிய வந்து நின்னை வேண்டுகின்றோம். எமக்கு இரும்பு முகம் செறித்த ஏந்து எழில் மருப்பினை உடைய களிறு ஒன்று தருக.