பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

358

புறநானூறு - மூலமும் உரையும்



பழுமரம் உள்ளிவரும் பறவையைப்போல் நின்னை நாடி வந்தவரன்றோ யாம். எமக்குத் தவறாது தந்து அருள்வாயாக'

371. பொருநனின் வறுமை!

பாடியவர்: கல்லாடனார். பாடப்பட்டோன். பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன். திணை: வாகை. துறை: மறக்களவழி.

(தலையாலங்கானத்தே வெற்றி வாகை சூடியவனாக நின்ற பாண்டியனைப் பரிசில் வேட்டுப்பாடுகின்றார் புலவர். பின் தேர்க் குரவைக்கு (21 - 27 அடிகள்) மேற்கோள் காட்டுவர் இளம் பூரணனார்)

அகன்தலை வையத்துப் புரவலர்க் காணாது, மரந்தலைச் சேர்ந்து பட்டினி வைகிப், போதவிழ் அலரி நாரின் தொடுத்துத் தயங்குஇரும் பித்தை பொலியச் சூடிப் பறையொடு தகைத்த கலப்பையென், முடிவுவாய் 5

ஆடுறு குழிசி பாடின்று தூக்கி, மன்ற வேம்பின் ஒண்பூ உறைப்பக், குறைசெயல் வேண்டா நசைஇய இருக்கையேன், அரிசி இன்மையின் ஆரிடை நீந்திக், கூர்வாய் இரும்படை நீரின் மிளிர்ப்ப, 10

வருகணை வாளி...... அன்பின்று தலைஇ, இரைமுரசு ஆர்க்கும் உரைசால் பாசறை, வில்லேர் உழவின்நின் நல்லிசை யுள்ளிக், குறைத்தலைப் படுபிணன் எதிரப், போர்அழித்து _ யானை எருத்தின் வாள்மட லோச்சி, - 15

அதரி திரித்த ஆள்உகு கடாவின், மதியத் தன்னஎன் விசியுறு தடாரி அகன்கண் அதிர, ஆகுளி தொடாலின், பணைமருள் நெடுந்தாள், பல்பிணர்த் தடக்கைப், புகர்முக முகவைக்கு வந்திசின் - பெரும; 20

களிற்றுக்கோட் டன்ன வாலெயிறு அழுத்து, விழுக்கொடு விரைஇய வெண்நிணச் சுவையினள், குடர்த்தலை மாலை சூடி, உணத்தின ஆனாப் பெருவளம் செய்தோன் வானத்து வயங்குபன் மீனினும் வாழியர், பல என, 25

உருகெழு பேய்மகள் அயரக், குருதித்துக ளாடிய களம்கிழவோயே!