பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

புலியூர்க்கேசிகன் 359

இவ்வுலக மெங்கும் சுற்றினேன். புரவலரைக் காணாது ஏங்கி வாடிப் பட்டினியோடு ஒரு மரத்தடியிலே வந்து சேர்ந்தேன். போதவிழ்ந்த மலர்களை நாரிலே தொடுத்துத் தலையிலே அழகுறச் சூட்டிக் கொண்டேன். பறையோடு சேர்ந்த இசைக்கருவிகள் அடங்கிய பையுடன் இருந்தேன். சமையற் கலத்தை மெல்ல எடுத்துவைத்தும் வேப்பம்பூ உதிரவும் அரிசி ஏதும் இன்மையால் எதுவும் செய்ய விரும்பாது இருந்தேன். பொருளாசை ஒன்றே மிகுந்தது. அதன்பின், பலவழிகளும் கடந்து, பாசறைக்கண்ணே நீ தங்கினை என அறிந்து, இங்கே நின்பால் வந்தேன். பகைவரை அழித்து நீ பெற்ற வெற்றியும், களத்திலே நீ அவர்க்குச் செய்த அழிவும் கண்டேன். தடாரிப் பறையை முழக்கியவனாக வந்த எனக்குக், களிறாகிய பரிசிலைத் தருவாயாக! நின்னால் பெருவிருந்து ஊட்டப் பெற்றதனால் உளமகிழ்ந்த பேய் மகளுங் கூட, 'வானத்து மீனினும் பல்லாண்டு வாழ்க நீ என வாழ்த்துகின்ற பெருமையுடையவனே! வாழ்க நீ

372. ஆரம் முகக்குவம் எனவே!

பாடியவர்: மாங்குடி கிழார். பாடப்பட்டோன். தலையாலங் கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன். திணை: வாகை. துறை: மறக்கள வேள்வி.

(பாண்டியனின் களவென்றிச் சிறப்பை போற்றிப் பாடுவது இச் செய்யுள். புலவுக் களம் பொலிய வேட்டோய், நின் நிலவுத் திகழ் ஆரம் முகக்குவம் என்வே” என்று, பரிசிலும் வேண்டுகின்றார் புலவர்)

விசிபிணித் தடாரி விம்மென ஒற்றி, ஏத்தி வந்த தெல்லாம் - முழுத்த இலங்குவாள் அவிரொளி வலம்பட மின்னிக் கணைத்துளி பொழிந்த கண்கூடு பாசறைப், பொருந்தாத் தெவ்வர் அரிந்ததலை அடுப்பின், - 5 கூவிள விறகின் ஆக்குவரி நுடங்கல், ஆனா மண்டை வன்னியந் துடுப்பின், ஈனா வேண்மாள் இடந்துழந்து அட்ட மாமறி பிண்டம் வாலுவன் ஏந்த "வதுவை விழவின் புதுவோர்க்கு எல்லாம் 10

வெவ்வாய்ப் பெய்த பூதநீர் சால்க" எனப்; புலவுக்களம் பொலிய வேட்டோய்! நின் நிலவுத்திகழ் ஆரம் முகக்குவம் எனவே,