பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

367


பனியிலே கிடந்து உறங்கியதனால் தலை நனைந்தவனாக, அவன் இனிதே உறங்கும் செல்வமனையிடத்தே, என் வறுமையின் வருத்தம் நீங்கக் கருதிச் சென்றேன். என் தடாரி இசையையும் முழக்கினேன். அவனைப் பலரும் வாழ்த்தவும், அவன் அவரை யெல்லாம் வரவேற்கவும், அவருக்கு வழங்கவுமாகத் தனக்கு ஒருவரும் நிகரற்றோனாக விளங்கினான். அந்த ஆரவாரத்தைக் கண்டயான், பலரும்பாராட்டக் கேட்டுக்கேட்டு, அவன் பெருமை என் புலமைக்கும் அளவு கடந்து விளங்கக் கண்டு, மதிமயங்கி நின்றேன். என்னை அவன் கண்டான். தொலை நாட்டிலிருந்து வந்த கிணைஞனே! நீ எம்மால் காக்கப்படுவாய்' என்று சொல்லி, மலையிடைப் பெறப்பட்ட மணியும், காடு தந்த முத்தமும், வேறு வகையான உடைகளும், கள் குடமும், செல்வங்களும் நல்கினான். கனவிற் கண்டது போல, நனவிலே அத்துணையும் அவனால் தரப்பெற்று, என் வறுமையும் தீர்ந்தவனானேன். நாடு என்று புகழ்ந்து பேசத்தக்கது அவன் நாடே என்பர். வேந்தரிற் சிறந்தோனும் அவனே என்பர். அன்பு நிறைந்த தோன்றலான அவன், கடல்போலப் பெருக்கமுடைய களிறுகள், தேர்கள், குதிரைகள், வேல்மறவர், வாள்மறவர், விற்படைஞர் ஆகிய தானைப் பெருக்கமும் உடையவன். போரிலே வெற்றியை விரும்பும் அத்தகைய எம் தலைவன், நெடிது வாழ்வானாக!

378. எஞ்சா மரபின் வஞ்சி!

பாடியவர்: ஊன்பொதி பசுங்குடையார். பாடப்பட்டோன். சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி. திணை: பாடாண். துறை: இயன்மொழி. .

(அரசன் அளித்த பெருஞ் செல்வத்தைப் பெற்ற புலவரின்

குடும்பத்தார் அடைந்த அனுபவத்தை நயமாகக் கூறி, அவனது

கொடை இயல்பைப் போற்றுகின்றார் புலவர்)

தென் பரதவர் மிடல் சாய, . வட வடுகர் வாள் ஒட்டிய தொடையமை கண்ணித் திருந்துவேல் தடக்கைக் கடுமா கடைஇய விடுபரி வடிம்பின், நற்றார்க் கள்ளின், சோழன் கோயில், 5

புதுப்பிறை யன்ன சுதைசெய் மாடத்துப், பனிக்கயத் தன்ன நீள்நகர் நின்று, என் S. அரிக்கூடு மாக்கிணை இரிய ஒற்றி, . எஞ்சா மரபின் வஞ்சி பாட, எமக்கென வகுத்த அல்ல, மிகப்பல 1 O