பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

புறநானூறு - மூலமும் உரையும்


- சொற்பொருள்: 6 படுவது ஆறில் ஒன்றாகிய இறையை, ஆறாவன: தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல், தான் என்ற ஐந்தொடு, அரசர்க்குரியதும் ஆக ஆறாம். பகல் - நடுவு நிலைமை. 9. தாழை - இங்கு, தென்னை, 12 சுடர்ப்பூ தீப்போலும் செந்நிற முடைய ஒரு பூ.28. அருப்பம் - அரண்.34. பல் தோல் பல பரிசைப்

L/60)t . . .

18. நீரும் நிலனும்! பாடியவர்: குடபுலவியனார். பாடப்பட்டோன். பாண்டியன் நெடுஞ்செழியன். திணை: பொதுவியல். துறை: முதுமொழிக் காஞ்சி; பொருண்மொழிக் காஞ்சி எனவும் பாடம்.

("நீர்நிலை பெருகத் தட்கவே, அறன் முதலான மூன்றும் பயக்கும்’ என்பது கூறினமையின், இது முதுமொழிக் காஞ்சி ஆயிற்று. உயிருக்கு உறுதி தருகிற பொருளைக் கூறுதலால், 'பொருண்மொழிக் காஞ்சியும் கொள்ளப்படும். 'உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்’ என்னும் பொன் மொழியைத் தந்தது இச் செய்யுளே) -

முழங்கு முந்நீர் முழுவதும் வளைஇப்

பரந்து பட்ட வியன் ஞாலம்

தாளின் தந்து, தம்புகழ் நிறீஇ,

ஒருதாம் ஆகிய உரவோர் உம்பல்!

ஒன்றுபத்து அடுக்கிய கோடிகடை இரீஇய - 5

பெருமைத்து ஆக நின் ஆயுள் தானே! நீர்த் தாழ்ந்த குறுங் காஞ்சிப் பூக் கதூஉம் இன வாளை, நுண் ஆரல், பருவரால், .. குரூஉக் கெடிற்ற குண்டு அகழி, 10

வான் உட்கும் வடிநீண் மதில்; - மல்லல் மூதூர் வய வேந்தே! - செல்லும் உலகத்துச் செல்வம் வேண்டினும், ஞாலம் காவலர் தோள்வலி முருக்கி, - ஒருநீ ஆகல் வேண்டினும், சிறந்த 15 நல்இசை நிறுத்தல் வேண்டினும், மற்றதன் தகுதி கேள், இனி, மிகுதியாள! நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம் உண்டிகொடுத்தோர் உயிர்கொடுத்தோரே, உண்டி முதற்றே உணவின் பிண்டம்; 20