பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

369


நெல்லரி தொழுவர் கூர்வாள் மழுங்கின், பின்னை மறத்தோடு அரியக், கல்செத்து, அள்ளல் யாமைக் கூன்புறத்து உரிஞ்சும் 5 நெல்லமல் புரவின் இலங்கை கிழவோன் வில்லி யாதன் கிணையேம்; பெரும! 'குறுந்தாள் ஏற்றைக் கொளுங்கண் அவ்விளர், நறுநெய் உருக்கி, நாட்சோறு ஈயா, வல்லன், எந்தை, பசிதீர்த் தல் எனக் 10 கொன்வரல் வாழ்க்கைநின் கிணைவன் கூறக், கேட்டதற் கொண்டும் வேட்கை தண்டாது, விண்தோய் தலைய குன்றம் பிற்பட,

- - - - - c < * * - ரவந்தனென், யானே. தாயில் தூவாக் குழவிபோல, ஆங்குஅத் 15

திருவுடைத் திருமனை, ஐதுதோன்று கமழ்புகை வருமழை மங்குலின் மறுகுடன் மறைக்கும் குறும்படு குண்டகழ் நீள்மதில் ஊரே.

(. நசைதர வந்தனென் - பாடம்)

நெல்லரிகின்ற தொழுவர், தம் வாளின் கூர்மையானது மழுங்கினால், அதனால் சோர்ந்துவிடாது, சேற்றிலே கிடக்கும் ஆமையின் முதுகிலே தம் அரிவாளைத் தீட்டும் நெல்வயல் நெருங்கிய மாவிலங்கையின் தலைவன் வில்லியாதன். அவனுடைய கிணையேம் யாம். நெய்யிலே பொரித்த பன்றித் தசையும் சோறும் இரவன்மாக்களுக்கு என்றும் தந்து பசி தீர்ப்பவன்.அவன் என்று, புலர் காலையிலே வந்து பாடும் நின் கிணைப் பொருநன் சொல்லினன். அதனைக் கேட்டதுமே நின்னைக் காண வேண்டுமென்னும் அவா மிகுந்தவனானேன். தாயிடத்திலே பாலுண்ணத் தாவிவரும் குழந்தைபோல, நின்பால் பரிசு பெறும் ஆசை ஏவ இங்கே வந்தேன். நின் திருமனைக்கண்.இரவலர்க்கு அமுது அளிக்க உணவாக்க எழுந்த புகை, மேகம்போல வானை மறைக்கின்றது. அரணை அடுத்த அகழியும் நீண்ட மதிலும் உடைய நின் ஊர்க்கு வந்தேன். எனக்கும் உதவுக பெருமானே!

380. சேய்மையும் அணிமையும்! பாடியவர்: கருவூர்க் கதப்பிள்ளை. பாடப்பட்டோன்: நாஞ்சில் வள்ளுவன். திணை: பாடாண். துறை: இயன்மொழி.

(தென்னவர் மறவனாகத் திகழ்ந்தவன் இவன். இவனது - கொடையும், மறமும் ஆகிய இயல்பு நலங்களை வியந்து பாடுகின்றார் புலவர்)