பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

372

புறநானூறு - மூலமும் உரையும்


உதவும் படகினைப் போன்றவன்; உறுதியான குறிக்கோளும் விலக்கப்படாத கொள்கையும் உடையவன் அவன்.

382. கேட்டொறும் நடுங்க ஏத்துவேன்!

பாடியவர்: கோவூர் கிழார். பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி. திணை: பாடாண். துறை: கடைநிலை.

(நலங்கிள்ளிபாற் சென்று தம்மைப் பற்றிய வறுமையின் நிலையைக் கூறி, அதனைப் போக்குதற்கு ஏற்ற பரிசிலைத் தந்து உதவுமாறு கேட்டு நிற்கின்றார் புலவர். வினவி நிற்றலின் கடைஇ நிலை ஆயிற்று)

கடல் படை அடல் கொண்டி,

மண் டுற்ற மலிர் நோன்றாள்,

தண் சோழ நாட்டுப் பொருநன்,

அலங்கு உலை அணி இவுளி -

நலங் கிள்ளி நசைப் பொருநரேம்; . 5

பிறர்ப் பாடிப் பெறல் வேண்டேம் அவற்பாடுதும், 'அவன் தாள் வாழிய! என; நெய் குய்ய ஊன் நவின்ற

பல் சோற்றான், இன் சுவைய - நல்குரவின் பசித் துன்பின்நின் 10

முன்நாள் விட்ட மூதறி சிறா அரும், யானும், ஏழ்மணி யங்கேள், அணிஉத்திக், கட் கேள்விக், கவை நாவின்

நிறன்.உற்ற, அராஅப் போலும்

வறன் ஒரீஇ வழங்கு வாய்ப்ப, 15

விடுமதி அத்தை, கடுமான் தோன்றல்! நினதே, முந்நீர் உடுத்தஇவ் வியன்.உலகு, அறிய, எனதே, கிடைக்காழ் அன்ன தெண்கண் மாக்கிணை கண்ணகத்து யாத்த நுண்அரிச் சிறுகோல் எறிதொறும் நுடங்கி யாங்கு, நின் பகைஞர் 20 கேட்டொறும் நடுங்க, ஏத்துவென், வென்ற தேர், பிறர் வேத்தவை யானே.

'கடற்படை யாற்றலால் கொண்ட பெரும் பொருள் நிரம்பிய பெருவலியுடையோன் தண் சோழ நாட்டுப் பொருநன்; அசையும் தலையாட்டம் அமைந்த குதிரைகளை உடையவன் அவன். அவன் விரும்பும் பொருநரேம் யாம். பிறரைப் பாடி