பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

HeÓlubiš Gsắissir - - 373

எதனையும் பெறுவதை வேண்டேம். அவன் தாள் வாழிய' என அவனையே பாடுவோம். "நீயும் அவன் பாற் செல்க. நெய்யிலே பொரித்த, ஊன் கலந்த பலவகையான இனிய சுவைமிகுந்த சோற்றை நினக்கும் நின் பசி நீங்கத் தருவான்’ என்று சொல்லினர் நின் பொருநர். பெருமானே! கடுமான் தோன்றலே! அதனால், நின்னை நாடி வந்த யானும், என் சுற்றமும், எம் பசி ஒழிந்து, பிறர்க்கும் வழங்கி மகிழுமாறு வேண்டிய பரிசில்கள் தந்து எம்மை அனுப்புவாயாக. கடல் சூழ்ந்த இவ்வுலகம் யாம் அறிந்தவரை நினதேயாம். என்னுடையதேயான இத் தடாரிப் பறையினை நுண்ணரிச் சிறுகோலால் யான் அடிக்குந்தோறும், தடாரியின் கண் நடுங்குவது காணாய். இதுபோன்று பிற வேந்தரது அவையிலும் சென்று, அவருங் கேட்டு நடுங்குமாறு நின் புகழைச் சொல்லி யானும் நின்னைப் போற்றுவேன். .

383.வெள்ளி நிலை பரிகோ?

பாடியவர்: மாறோக்கத்து நப்பசலையார். பாடப்பட்டோன்: பெய்ர் தெரிந்திலது. (கடுந்தேர் அவியனென் ஒருவனை உடையேன்” என்று குறித்தது கொண்டு, அவனைப் பாடியதாகக் கொள்ளலும் பொருந்தும்) திணை: பாடாண். துறை: கடைநிலை.

(அரசனின் கடை வாயிலின்கண் நின்று, அவனருளை வேண்டிப் பாடுகின்றார் புலவர். 'வெள்ளியது நிலை எவன் பரிகோ? என்றது, கக்கிரனின் மாறுபட்ட நிலைமையால் வாழ்க்கை நிலை மாறும் என்று காட்டுதலைக் காண்க)

ஒண்பொறிச் சேவல் எடுப்ப ஏற்றெழுந்து, தண்பனி உறைக்கும் புலரா ஞாங்கர், நுண்கோல் சிறுகிணை சிலம்ப ஒற்றி, நெடுங்கடை நின்று, பகடுபல வாழ்த்தித் தன்புகழ் ஏத்தினெ னாக, ஊன்புலந்து, 5

அருங்கடி வியன்நகர்க் குறுகல் வேண்டிக், கூம்புவிடு மென்பிணி அவிழ்த்த ஆம்பல், தேம்பாய் உள்ள தம்கமழ் மடர்உளப், பாம்புஉரி அன்ன வடிவின, காம்பின் கழைபடு சொலியின் இழைஅணி வாரா 10 ஒண்பூங் கலிங்கம் உடீஇ நுண்பூண் வசிந்துவாங்கு நுசுப்பின், அவ்வாங்கு உந்திக், கற்புடை மடந்தை தற்புறம் புல்ல, - எற்பெயர்ந்த நோக்கி............

.கற்கொண்டு: . 15