பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

!

புலியூர்க்கேசிகன்- - A 27

உணவெனப் படுவது நிலத்தோடு நீரே, நீரும் நிலனும் புணரியோர், ஈண்டு உடம்பும் உயிரும் படைத்திசி னேர்ரே, வித்திவான் நோக்கும் புன்புலம் கண்ணகன் வைப்பிற்று ஆயினும், நண்ணி ஆளும் - - 25, இறைவன் தாட்குஉத வாதே; அதனால் அடுபோர்ச் செழிய! இகழாது வல்லே நிலன்நெளி மருங்கின் நீர்நிலை பெருகத் தட்டோர் அம்ம, இவண்தட்டோரே, தள்ளா தோர்.இவண் தள்ளாதோரே. • 30

ஒலி முழங்கும் கடல் சூழ்ந்த பரந்த நாடு இந் நாவலந் தீவு. இதனைத் தம் அரிய முயற்சியால் வெற்றிகொண்டு புகழ் பெற்றுத் தாமே ஒரு குடைக்கீழ் அரசாண்டவலிமை உடையவர் பாண்டியர். அவர் வழி வந்தவனே கோடியினும் மேலான ஆண்டுகளாக நின் வாழ்நாள் நீடிப்பதாக! வாளை மீன்களும், ஆரல்களும், வரால்களும், கெளிறுகளும் நிறைந்த அகழி சூழ்ந்ததும், வானம் அளாவிய மதிலைக் கொண்டதும் ஆகிய பழைய ஊரைத் தலைநகராக உடையவனே! வலிமிக்க வேந்த்னே! நீ மறுமை இன்பத்தை விரும்பினாலும், உலகு முழுவதையும் வெல்ல வேண்டுமென நினைத்தாலும், நிலைபெற்ற புகழை விரும்பினாலும், அதற்குச் செய்யவேண்டுவன யாவை எனக் கேட்பாயாக நீர்மை இன்றி வாழாது உடல், அவ்வுடலுக்கு உணவு கொடுத்தவரே உயிர் கொடுத்தவரும் ஆவர். உணவால் உளதாவதுதான் மனித உடல். உணவோ நிலத்தின் விளைவும், நீரும் ஆகும்.நீரையும் நிலத்தையும் ஒருங்குகூட்டி வேளாண்மைக்கு உதவுக, அவ்வாறு உதவியவரே உலகத்தில் உயிரையும் உடலையும் நிலைநிறுத்தி வாழ்வித்தவராவர். புன்செய் நிலம் இடமகன்றும் விளையுள் பெருக்காமையினால் பயன் அற்றதாகும். எனவே, செழியனே! இதனை நீ எண்ணுக, நீர் தடிந்து குளம்தொட்டு நின் நாடு எங்கணும் வளம் பெருக்குவாயாக! இது செய்தோர் மூவகை இன்பமும் பெற்றுப் புகழடைவர்; அல்லாதோர் புகழ்பெறாது மடிவர் எனவும் உணர்வாயாக (வேளாண் பெருக்கமே மன்னர்க்கு வலுவும் புகழும் தரும் என்ற மிகவுஞ் சிறந்த உண்மையை விளக்குவது இப் பாடல்) .

சொற்பொருள்: 6. பெருமைத்து - சங்கம் முதலாகிய பேரெண்ணினை யுடைத்தாக. 10. கெளிறு - மீனின் வகை. 11. வடி - திருத்திய, 17. தகுதி - வேட்கைக்குத் தக்க செய்கை. 26. தாட்கு - முயற்சிக்கு 28. நெளி மருங்கின் - குழிந்த விடத்தே.