பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/391

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

379


பலபிற வாழ்த்த இருந்தோர் தங்கோன்! மருவ அன்நகர் அகன் கடைத்தலைத், திருந்துகழல் சேவடி குறுகல் வேண்டி, வென் றிரங்கும் விறன் முரசினோன்! என் சிறுமையின், இழித்து நோக்கான். 20

தன் பெருமையின் தகவு நோக்கி, குன்று உறழ்ந்த களி றென்கோ,

கொய் யுளைய மா என்கோ;

மன்று நிறையும் நிரை என்கோ; மனைக் களமரொடு களம் என்கோ, 25

ஆங்கவை கனவுஎன மருள, வல்லே, நனவின் நல்கி யோனே, நகை சால் தோன்றல் ஊழி வாழி, பூழியர் பெருமகன்! பிணர் மருப்பு யானைச் செருமிகு நோன்தாள் செல்வக் கடுங்கோ வாழியாதன் - 30

ஒன்னாத் தெவ்வர் உயர்குடை பணிந்து, இவன் விடுவர் மாதோ நெடிதோ நில்லாப் புல்லிலை வஞ்சிப் புறமதில் அலைக்கும் கல்லென் பொருநை மணலினும், ஆங்கண் பல்லூர் சுற்றிய கழனி 35 எல்லாம் விளையும் நெல்லினும் பலவே. * 'வயலாமையின் வெள்ளை அடிவயிறு போன்ற தடாரிப் பறையை இயக்கிச் சென்று, நின் கொல்களிறுகளால் பகை வேந்தரை அழித்து, அவர் திறை தரவும், அதனைக் கொண்டு, புலவர்களின் வறுமை அகற்றிய நின் திருவடிகள் மிகவும் பொலிவதாக என்று இசைத்தேன். பிற மன்னர் பலரும் வாழ்த்த அருளும் தலைவனாக இருந்தனன் அவன். கடைத் தலையில் திருவடி பெயர்வதற்கும் வெற்றிமுரசம் முழங்கும் பெருமை உடையோன் அவன் என் சிறுமை கண்டும் இழித்து நோக்கினான் அல்லன். தன் பெருமையின் தகுதிக்குத் தக்கவாறே என்னை ந்ோக்கினான். குன்று உறழ்ந்த களிறு என்பேனோ? கொய் உளையினையுடைய குதிரை என்பேனோ? மன்று நிறையும் ஆநிரை என்பேனோ? மனைக் களமர் என்பேனோ? நெற்போர்க் களம் என்பேனோ? கனவோ என இவ்வாறு யான் மருளுமாறு. அனைத்தும் நனவிலேயே வழங்கினான் அவன். அன்பு நிறைந்தவன் அச் சேரமான், பூழியர் பெருமகன்; யானைப் போர்வல்ல செல்வக்கடுங்கோ வாழியாதன்! பகைவரும் அவன் மறங்கேட்டு அஞ்சித் தம் குடை தாழ்த்துப் பணிந்து திறைதர வரும்