பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

380

புறநானூறு - மூலமும் உரையும்


கூட்டம், வஞ்சி மதிற்புறத்தையே அலைக்கின்றதே பொருநை யாற்று மணலினும், அந்த ஆற்றுப் பாய்ச்சலால் கழனிகளில் விளையும் நெல்லினும், பலவாகிய ஊழிகள் அவன் வாழ்வானாக!

388. நூற்கையும் நா மருப்பும்! பாடியவர்: மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார். பாடப்பட்டோன். சிறுகுடிகிழான் பண்ணன். திணை: பாடாண். துறை: இயன்மொழி.

(பண்ணனது இயல்பு மேம்பாடுகளை நயமுடன் எடுத்துக் கூறுகின்றது செய்யுள்)

வெள்ளி தென்புலத்து உறைய, விளைவயல் பள்ளம், வாடிய பயன்இல் காலை, இரும்பறைக் கிணைமகன் சென்றவன், பெரும்பெயர் சிறுகுடி கிழான் பண்ணன் பொருந்தித், தன்நிலை அறியுநன் ஆக, அந்நிலை 5 இடுக்கண் இரியல் போக, உடைய கொடுத்தோன் எந்தை, கொடைமேந் தோன்றல். நுண்ணுல் தடக்கையின் நாமருப்பாக, வெல்லும் வாய்மொழிப் புல்லுடை விளைநிலம் பெயர்க்கும் பண்ணற் கேட்டிரோ, அவன் 10

வினைப்பகடு ஏற்ற மேழிக் கிணைத்தொடா நாடொறும் பாடேன் ஆயின், ஆனா மணிகிளர் முன்றில் தென்னவன் மருகன், பிணிமுரசு இரங்கும் பீடுகெழு தானை - அண்ணல் யானை வழுதி, 15

கண்மா றிலியர்என் பெருங்கிளைப் புரவே!

பள்ளத்தாக்கின்கண் அமைந்த விளைவயலும் நீரற்று வறண்ட பஞ்ச காலத்தில், தடாரியை இசைத்துச் சென்று, ஒரு பொருநன், சிறுகுடிகிழான் பண்ணனை அடைந்தான்; தன் நிலையை அறிவித்தான். அப்பொழுதே அவனுடைய துயரம் முற்றும் தீருமாறு வேண்டியன கொடுத்தான் அவன். அவனே எம் தலைவனும் கொடையால் மேம்பட்ட தோன்றலுமான பண்ணன். நூலறிவே கையாகவும், தம் செந்நாவே மருப்பாகவும், வெல்லும் வாய்மொழிப் புலவர்களுக்கு, வரப்பிற் புல் மலிந்த விளைநிலங்களை அளிக்கும் எம் பண்ணனைக் குறித்துக் கேட்டீர்கள். அவனுடைய உழவு எருதுகளையும் உயர்வினையும் பொருளாகக் கொண்டு, கிணைகொட்டி நாடோறும் யான்