பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/396

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

384

புறநானூறு - மூலமும் உரையும்


தீர்கை விடுக்கும் பண்பின் முதுகுடி நனந்தலை மூதூர் வினவலின், 10 'முன்னும் வந்தோன் மருங்கிலன், இன்னும் அளியன் ஆகலின், பொருநன் இவன் என, நின்னுணர்ந்து அறியுநர் என் உணர்ந்து கூறக், காண்கு வந்திசிற் பெரும, மாண்தக இருநீர்ப் பெருங்கழி நுழைமீன் அருந்தும் 15 ததைந்த தூவியம் புதாஅஞ் சேக்கும் துதைந்த புன்னைச் செழுநகர் வரைப்பின், நெஞ்சமர் காதல் நின்வெய்யோளொடு, இன்துயில் பெறுகதில் நீயே, வளஞ்சால் துளிபதன் அறிந்து பொழிய, 20 வேலி ஆயிரம் விளைக நின் வயலே!

வேங்கடமலைக்கு வடக்கேயுள்ள நாடுகள் வறட்சி கொள்ள, ஆங்கு நெற்களம் வாழ்த்திப் பெற்ற நெல்லுடனும் ஊனும் கள்ளும் உண்டு களித்த என் சுற்றத்துடனும், இங்கே வந்து தங்கினேன். இங்கிருந்து நீங்கி, வேறு வளநாடு தேடிச் செல்ல எண்ணிப், பழங்குடி நிறைந்த பழநகரிலே சென்று கேட்டேன். நின்னை உணர்ந்து அறிந்தவரான சிலர், என்னைக் கண்டு, 'முன்பே வந்தான்! இன்னும் வறுமையுடையான் அளிக்கத் தக்கவனே என உணர்ந்து கூறினர். அதுகொண்டு நின்னைக் காண வந்தேன். பெருமானே! நீ நின் நெடுமனையின்கண் நின் இல்லாளோடு இனிதே வாழ்வாயாக நாட்டிலே பதம் அறிந்து மழை பொழிய, நின் நிலங்கள் வேலிக்கு ஆயிரமாக நெல் விளைவதாக எனக்கும் அருளிக் காப்பாயாக!

392. அமிழ்தம் அன்ன கரும்பு!

பாடியவர்: ஒளவையார். பாடப்பட்டோன்: அதியமான் நெடுமானஞ்சி மகன் பொகுட்டெழினி. திணை: பாடாண். துறை: கடைநிலை.

(அதியர் கோமானின் நெடுங்கடை நின்று பாடிய செய்தியைக் கூறுகிறது செய்யுள். 'அந்தரத்து அரும் பெறல் அமிழ்தம் அன்ன கரும்பு இவண் தந்தோன் என, இவன் குடி முன் னோரின் சிறப்பையும் இவனுக்கு உரைத்துப் போற்றுகின்றனர்)

மதிஏர் வெண்குடை அதியர் கோமான் கொடும்பூண் எழினி, நெடுங்கடை நின்று, யான் பசலை நிலவின் பனிபடு விடியல்,