பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

புறநானூறு - மூலமும் உரையும்



19. எழுவரை வென்ற ஒருவன்!

பாடியவர்: குடபுலவியனார். பாடப்பட்டோன். பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன். திணை: வாகை. துறை: அரசவாகை.

('மன்னுயிர்ப் பன்மையும், கூற்றத்து ஒருமையும் நின்னொடு தூக்கிய வென்வேற் செழிய' என, இச் செழியனின் அளப்பரிய பெரும் பேராற்றலைக் கூறுவர் புலவர். தலையாலங்கானப் பெரும்போரை ஒருவனாக நின்று வென்ற சிறப்பினன் இவன். அகநானூற்று 36, 175,209 ஆம் செய்யுட்களும், மதுரைக்காஞ்சியும் இவன் புகழை விளக்கும் பிற செய்யுட்கள் ஆம்)

இமிழ் கடல் வளைஇய ஈண்டு.அகல் கிடக்கைத் தமிழ் தலை மயங்கிய தலையாலங் கானத்து, மன்உயிர்ப் பன்மையும், கூற்றத்து ஒருமையும்: நின்னொடு தூக்கிய வென்வேற் செழிய! இரும்புலி வேட்டுவன் பொறி அறிந்து மாட்டிய 5 பெருங்கல் அடாரும் போன்ம் என் விரும்பி, முயங்கினேன் அல்லனோ யானே! மயங்கிக் குன்றத்து இறுத்த குரீஇஇனம் போல,

அம்புசென்று இறுத்த அறும்புண் யானைத் தூம்புஉடைத் தடக்கை வாயொடு துமிந்து 10. நாஞ்சில் ஒப்ப, நிலமிசைப் புரள, எறிந்துகளம் படுத்த ஏந்துவாள் வலத்தர் எந்தையோடு கிடந்தோர் எம் புன்தலைப் புதல்வர்; 'இன்ன விறலும் உளகொல், நமக்கு? என. 15

மூதில் பெண்டிர் கசிந்து அழ, நாணிக் கூற்றுக்கண் ஓடிய வெருவரு பறந்தலை, எழுவர் நல்வலங் கடந்தோய்! நின் கழுஉ விளங்கு ஆரம் கவைஇய மார்பே?

ஒலிகடலாற் சூழ்ந்தது இவ்வுலகம். இதன்கண், ஒரு சமயம் தலையாலங்கானத்தில் மன்னர் பலர் தம்முட் கலந்து நின்றனர். அங்கு வீழ்ந்தாரோ கணக்கற்ற வீரர். அவர் உயிர் குடித்தவன் கூற்றுவனோ, நீயோ என ஒப்பிட்டுக் காண முயன்றவர் பலர். அத்தகைய வெற்றிவேற் செழியனே! புலி வேட்டை ஆடுவார் எந்திரமறிந்து கொளுத்திய கல்லையுடைய அடார் போன்றது நின் திண்ணிய முத்தார மார்பு. அதனை யானும் அன்று தழுவினேன் அல்லனோ? அக் களத்தை எண்ணிப் பாராய் இருபெரு