பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/407

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

395


ஓங்குசினை மாவின் தீங்கனி நறும்புளி, மோட்டிரு வராஅல் கோட்டுமீன் கொழுங்குறை, 5

செறுவின் வள்ளை சிறுகொடிப் பாகல், பாதிரி யூழ்முகை அவிழ்விடுத் தன்ன, மெய்களைந்து, இனனொடு விரைஇ ..... மூழ்ப்பப் பெய்த முழுஅவிழ்ப் புழுக்கல். அழிகளிற் படுநர் களியட வைகின், 10 பழஞ்சோறு அயிலும் முழங்குநீர்ப் படப்பைக் காவிரிக் கிழவன், மாயா நல்லிசைக் கிள்ளி வளவன் உள்ளி, அவன்படர்தும்; செல்லேன், செல்லேன் பிறர்முகம் நோக்கேன்; நெடுங்கழைத் தூண்டில் விடுமீன் நொடுத்துக், 15 கிணைமகள் அட்ட பாவற் புளிங்கூழ் பொழுதுமறுத் துண்ணும் உண்டியேன், அழிவுகொண்டு, ஒருசிறை இருந்தேன்; என்னே! இனியே, அறவர் அறவன், மறவர் மறவன், மள்ளர் மள்ளன், தொல்லோர் மருகன், 20

இசையிற் கொண்டான், நசையமுது உண்க என, மீப்படர்ந்து இறந்து, வன்கோல் மண்ணி வள்பரிந்து கிடந்தஎன் தெண்கண் மாக்கிணை விசிப்புறுத்து அமைந்த புதுக்காழ்ப் போர்வை, - அலகின் மாலை ஆர்ப்ப வட்டித்துக், 25 கடியும் உணவென்ன கடவுட்கும் தொடேன்; 'கடுந்தேர் அள்ளற்கு அசாவா நோன்சுவல் பகடே அத்தை யான் வேண்டிவந்தது'என, ஒன்றியான் பெட்டா அளவை அன்றே ஆன்று விட்டனன் அத்தை விசும்பின் 30 மீன்பூத் தன்ன உருவப் பன்னிரை ஊர்தியொடு நல்கி யோனே; சீர்கொள இழுமென இழிதரும் அருவி, வான்தோய் உயர்சிமைத் தோன்றிக் கோவே. கைக்குத்தலரிசிச் சோறும், புளிக்குழம்பும் வரால் இறைச்சியும், சுறாமீனின் கொழுத்த கறியும், வள்ளைக் கீரையும், பாகற்காயும், அவ்வவற்றின் இனத்தோடு கலந்து மூடி, ஆவியிலே சமைத்த சோறு உண்பவர் சோணாட்டு உழவர். அந் நாட்டிலே என் மனைவி தூண்டிலிட்டு மீன் பிடித்து விற்று ஆக்கித்தந்த புளிங்கூழைக் காலம் தவறியே உண்ணும் வழக்கமுடைய யான்,