பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/408

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

396

புறநானூறு - மூலமும் உரையும்


மனம் வருந்தியவனாக ஓரிடத்திலே இருந்தேன். அப்போது அங்கு வந்த சிலர், "அறவோர்க்கு அறவோன்; மறவருள் சிறந்த மறவன்; மள்ளருள் சிறந்த மள்ளன்; பழம்பெருமை வாய்ந்த தொல் குடியிற் பிறந்தவன்; அவன் நின் புகழ்கேட்டு நின்பால் அன்புடையவனாகி விட்டான்; நீ இனி விரும்புவதைப் பெறுவாயாக’ என்றனர். அதுகேட்டு விரைந்து என் கிணையையும் கொண்டவனாகத் தெய்வத்தையும் வழிபடாது அவன்பாற் சென்றேன். 'வண்டி சேற்றில் அழுந்தினாலும், அதனை இழுத்துச் செல்வதிலே தளராத வலிமையுடைய பகடு ஒன்று தருக" என் வேண்டினேன். அவனோ, அத்துடன் ஆ நிரைகளும் எருதுகளும் வண்டிகளும் கணக்கற்றன. தந்தான். அத்தகையான் தோன்றிக் கோன்; அவன் வாழ்க!

400. உலகு காக்கும் உயர் கொள்கை!

பாடியவர்:கோவூர் கிழார். பாடப்பட்டோன்: சோழன் நவங்கிள்ளி, திணை: பாடாண் துறை: இயன்மொழி.

('தன் பகை கடிதல் அன்றியும், சேர்ந்தோர் பசிப்பகை கடிதலிலும் வல்லன்” என்று கிள்ளியின் கொடைச் சிறப்பைப் போற்றுகின்றது செய்யுள்)

மாக விசும்பின் வெண் திங்கள்

மூவைந்தான் முறை முற்றக்,

கடல் நடுவண் கண்டன்ன என்

இயம் இசையா, மரபு ஏத்திக்

கடைத் தோன்றிய கடைக் கங்குலான் 5

பலர் துஞ்சவும் தான் துஞ்சான்,

உலகு காக்கும் உயர் கொள்கை,

கேட்டோன், எந்தை என் தெண்கிணைக் குரலே;

கேட்டற் கொண்டும், வேட்கை தண்டாது.

தொன்றுபடு சிதாஅர் மருங்கு நீக்கி, 10

மிகப் பெருஞ் சிறப்பின் வீறுசால் நன்கலம்

SYC C S S S S S S S S S CCS S S S S606).III.6ts

கலிங்கம் அளித்திட்டு என்அரை நோக்கி,

நாரரி நறவின் நாள்மகிழ் தூங்குந்து,

போர் தறியேன், பதிப் பழகவும், 15

தன்பகை கடிதல் அன்றியும் சேர்ந்தோர்

பசிப்பகை கடிதலும் வல்லன் மாதோ,

மறவர் மலிந்ததன் -