பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

29


வேந்தரான சேர சோழரும் ஐம்பெரு வேளிரும் தம்முள் ஒருங்குகூடி நின்னை எதிர்த்து நின்றும், முடிவில் தாமே தோற்றனர். அச்சத்தால், மலையிடத்தே காற்றைக் கிழித்து. வேகமாகச் செல்லும் பறவையினம் போன்று, நின் படைவீரர் கடுகி விடுத்த அம்புகள் களிறுகளின் கைகளைத் துளைத்தன. துளைத்த அக் கைகளுடன் அவற்றின் வாயினையும் சேர்த்து வெட்டி வீழ்த்தினர். அவை நிலம் உழும் கலப்பைகள் போன்று தரைமேல் கிடந்தன. அத்தகைய சிறந்த வாள் வலிமை உடையவனே! அக் களத்துள் தம் தலைவரோடு தம் அரிய மைந்தரும் உடன் வீழ்ந்து கிடக்கக் கண்ட மறக்குடி முதுதாயர், "இத்தகைய வெற்றியும் எமக்கு இனி உண்டோ?” எனக் கூறி, இன்ப உவகையால் அழுதனரே! அதுகண்டு வெவ்வுயிர் வெளவிய கூற்றமும் அன்று நாணி நின்றதே! ஒருவனாய் இவ்வாறு எழுவரையும் மலைந்து நீ பெற்ற வெற்றிச் சிறப்பை என்னென்பது? (பாண்டியனின் வீரமும் ஆற்றலும் போர்க் களத்தின் கொடுமையும் பாடியது இது)

சொற்பொருள்: 1. ஈண்டு அகன் கிடக்கை - அணுச் செறிந்த அகன்ற உலகம்.2.தமிழ்-தமிழ்ப்படைதலை, அசை, இடமும் ஆம். 9. அடார் - விலங்குகளை அகப்படுத்தும் பொறி. 8. இறுத்த தங்கிய 10. தூம்பு - துளை. துமிந்து துணிக்கப்பட்டு. 1. நாஞ்சில் - கலப்பை. 15. மூதில் பெண்டிர் மறக்குடியிற் பிறந்த முதிய மகளிர். 16.பறந்தலை போர்க்களம் 17 எழுவர் சேரன், சோழன் என்னும் இரு பெருவேந்தரும், திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேண்மான், பொருநன் எனும் ஐம்பெரு வேளிரும். 18. கவைஇய அகத்திட்ட -

20. மண்ணும் உண்பர்!

பாடியவ்ர்: குறுங்கோழியூர் கிழார். பாடப்பட்டோன்: சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை, மாந்தரஞ் சேரல் எனவும் குறிப்பர். திணை: வாகை. துறை: அரச

6)1fT65)Յ5.

(சேரனது மாண்பையும், அவனாற் காக்கப்பட்டு வந்த சேரநாட்டது வளமையினையும் கூறுகின்றார் புலவர். 'புள் நிமித்தத்தால் பாடாண் தலைவற்குத் தோன்றிய தீங்கு கண்டு அஞ்சி ஒம்படை கூறியது' என எடுத்துக் காட்டுவர் நச்சினார்க்கினியர் - (தொல், புறத்கு 36 உரை)

இரு முந்நீர்க் குட்டமும்,

வியன் ஞாலத்து அகலமும்,

வளி வழங்கு திசையும்,