பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/411

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

399


புறநானூற்றுச் செய்யுட்களைப் பாடினோர் வரலாறு

(எண் - பாட்டின் எண்)

அடைநெடுங் கல்வியார் 283, 344, 345

அளவு கடந்த கல்வியால் பெருஞ்சிறப்புப் பெற்றிருந்தவர் இவர். இவராற் பாடப் பெற்றோரும், இவர் காலத்தவரும் இன்னார் என்பது விளங்கவில்லை. இவர் பாடியுள்ள மகட்பாற் காஞ்சிச் செய்யுட்கள் பொருள் பொதிந்தன. 'தம் தங்கையை அளித்தற்குப் பரிசமாகச் செல்வத்தை வேண்டாராய்ச் செருப்புகலை வேண்டுவார் அண்ணன்மார்; இனி, இப் பணை நல்லூர் என்னாவது கொல் என்று இரங்கும் செய்யுள் (345), அக் காலத்து மறக்குடித் தலைவர்களது மற மேம்பாட்டை நன்கு காட்டுவதாகும். அண்ணன்மார்க்குத் தம் தங்கையிடமிருந்த பேரன்பும் விளங்கும். - அண்டர் மகன் குறுவழுதியார் 346

இவர் பாண்டியர் குடியினர், மற மேம்பாடும், அறிவுச் செறிவும் கொண்டவர். 'கனைத்த நெய்தற் கண்போல் மாமலர்' எனவும் (அகம் 150), கண்ணென மலர்ந்த மாயிதழ்க் குவளை’ எனவும் (அகம் 228) மகளிர் கண்ணழகைக் கவினுறக் கூறியவர். 'கல்லியேன் என்னும் வல்லாண்சிறாஅன் என்னும் செறிந்த வாக்கு, இவருடைய நுட்பமான புலமைத் திறத்தைக் காட்டும். அண்டர் தந்தை பெயர்; வழுதி இவர் குடிப்பெயர்; குறுமை உருவத்தை ஒட்டியது. அரிசில் கிழார் 146, 230, 281, 285, 300, 304, 342

'அரிசில்' என்னும் ஊரைச் சார்ந்த வேளாண் மரபினர் இவர். கல்விச் செறிவும், ஆட்சித் திறனும் ஒருங்கே அமையப் பெற்றவர். பதிற்றுப்பத்தில் எட்டாம் பத்தைப் பாடிச் சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையிடம், ஒன்பது நூறாயிரம் காணம் பரிசில் பெற்று, அவன் அமைச்சராகவும் பொறுப்பேற்றுத் திகழ்ந்தவர். குறுந்தொகைச் செய்யுள் ஒன்றும் (193), தகடுர் யாத்திரையுட் சில செய்யுட்களும் இவர் பெயரான் வழங்கும். வையாவிக் கோப் பெரும் பேகனையும், அதியமான் தகடூர் பொருது வீழ்ந்த எழினியையும், சேரமானையும் இவர் போற்றிப் பாடியுள்ளனர். இதனால், அவர்களைப் பாடியோரான கபிலர், பரணர், பெருங்குன்றுார் கிழார், பொன் முடியார், ஒளவையார் போன்ற பெரும் புலவர்களின் காலத்திலே இருந்தவர்