பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/413

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

401


ஆலங்குடி வங்கனார் 319

பரத்தையர் உறவுகொண்ட தலைமகனைக் குறித்துத் தலைமகள் உரைப்பதாக இவர் பாடியுள்ள நற்றிணைச் செய்யுள் மிக்க சுவையுடைய தாகும். 'நின் மாணிழை மகளிரை, எம்மனைத் தந்து நீதழிஇயினும், அவர், தம் புன்மனத்து உண்மையோ அரிதே; அவரும் பைந்தொடி மகளிரொடு சிறுவர்ப் பயந்து, நன்றிசான்ற கற்பொடு, எம்பாடு ஆதல் அதனினும் அரிதே' (நற்.330) எனக் கூறுவதாக உரைப்பார் இவர். சோழரது உறையூர் அவையத்து அறங்கெடாத நிலையையும் (400), தலைவன் வேந்து வினைகொண்டு சென்றிருந்த காலத்தும், அவன் மனைவி, வரும் இரவலரைப் பேணும் செவ்வியையும் (புறம் 319) இவர் செய்யுட்களாற் காணலாம். வங்கனார்’ என்னுஞ் சொல் கடல் வாணிபஞ் செய்துவந்த குடியைச் சார்ந்தவர் இவர் எனக் காட்டுவதுமாகும்; அன்றி வங்கத்திலிருந்து வந்து தமிழ் நாட்டில் வாழ்ந்தாரும் இவர் ஆகலாம். ஆலத்தூர் கிழார் 34, 36, 69, 225, 342

ஆலத்துரைச் சேர்ந்த வேளாண் குடியினரான இவர், அக் காலத் தமிழ்மக்களது பண்பு நலங்களைச் செறிவோடு எடுத்துக் கூறுகின்றனர். சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனுக்கு அறத்தாறு நுவலும் செய்யுள் (34) மிக்க பொருட்செறிவு உடையதாகும். வளவனின் வள்ளன்மையையும், மறமேம் பாட்டையும் இவர் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளார். சோழன் நலங்கிள்ளியின் படைப் பெருக்கத்தை இவர் எடுத்துக் கூறுகின்ற திறம் இவரது புலமைக்குச் சான்று பகரும்; அவனுடைய படைப் பெருக்கத்தையும் காட்டும் (புறம்225); வேந்தற்கு உறுதுணையாகச் செல்லும் தலைவனைப் பற்றிய செய்யுளும் (324), அத் தலைவனது மறமேம்பாட்டையும் வள்ளன்மையும் தெளிவுறக் காட்டுவதாகும். ஆலியார் 298

சோணாட்டின் ஒரு பகுதியாகிய ஆலி நாட்டினர் இவர். 'உணவளிக்கும் தலைவன், போருக்கு முந்திச் செல்க என்று ஏவுவான் அல்லன்' என ஒரு மறவன் கூறி வருந்துவதாக விளங்குகின்றது இச் செய்யுள். இச் செய்யுளின் அமைதியைக் கொண்டு, இதனைப் பாடிய இவரையும் மறக்குடிப் பிறந்தாருள் ஒருவர் என்றே கொள்வர். 4.

ஆவூர் கிழார் 322

வேளாண் குடியிற் பிறந்த தெளிந்த மூதறிவாளர் இவர்.

வன்புலத்தானாகிய ஒரு தலைவனின் வல்லாண்மையைச்