பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/414

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

402

புறநானூறு - மூலமும் உரையும்


சிறப்பித்து இச் செய்யுளில் இவர் கூறுகின்றார். கள்ளியின் முள்ளுக்கு உழுதுார் காளையின் ஊழ்கோட்டை உவமித்துள்ள. உவமைத் திறம் நயத்தற்குரியது ஆகும். இயற்கையை ஊன்றி உணரும் இவரது இயல்பும் இதனாற் புலனாகும். ஆவூர் மூலங்கிழார் 38, 40, 166, 177, 178, 196, 261, 301

இவரும் ஆவூர் வேளாண் குடியினரே யாவர்.

மூலவோரையிற் பிறந்ததனாலே மூலங்கிழார்' எனப் பெயர் பெற்றனர். சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனது சிறப்புக்களை இவர் மிகவும் அருமையாகப் பாடியுள்ளனர். சோணாட்டுப் பூஞ்சாற்றுார்ப் பார்ப்பான் கெளனியன் விண்ணந்தாயனையும், மல்லி கிழான் காரியாதியையும், பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனையும் பாடிப் பரிசில் பெற்றவர் இவர் ஆவர். தலைவனை இழந்த இல்லத்தின் பொலிவழிந்த நிலையைக், 'கொய்ம் மழித் தலையொடு கைம்மையுறக் கலங்கிய, கழிகல மகடூஉப் போலப் புல்லென் றனையாற் பல்லணி இழந்தே (புறம் 261) என உவமித்துக் கூறுகின்றனர்.வேந்துர்யான்ைக்கல்லது ஏந்துவன் போலான்தன் இலங்கிலை வேலே என மறவன் ஒருவனைக் குறித்துக் கூறுவது, அக் காலப் படைமறவரது மற மேம்பாட்டையும், தறுகண்மை யினையும் நன்கு காட்டுவதாகும் (புறம் 301).

இடைக்காடனார் 42

இடைக்காட்டினர் இவர்; கபிலர் காலத்தவர். சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை, இவர், இச் செய்யுளிற் போற்றுகின்றார். மலையின் இழிந்து மாக்கடல் நோக்கி, நிலவரை இழிதரும் பல்யாறு போலப், புலவர் எல்லாம் நின் நோக்கினரே' என, வளவனது கொடைத் திறனைச் சிறப்பித்துப் பாடுகின்றார் இவர். இவரது அகத் திணைச் செய்யுட்களுள் முல்லைத்திணைச் செய்யுட்கள் மிகுதி. அவற்றின் அமைவு, இவரை ஆயர் குலத்து அறிஞர் எனக் காட்டுகின்றதும் காண்க. இடைக்குன்றுர் கிழார் 76, 77, 78, 79

இவர் பாடியுள்ளவாகக் கிடைத்தன இந் நான்கு செய்யுட்களேயாம். இவை பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் போற்றிப் பாடியுள்ளவையாகக் காணப்படுகின்றன.ஆகவே, அவனைப் பாடிய மாங்குடிமருதனார் போன்றோர் காலத்தவரே இவரும் எனலாம். அரசனது வென்றிச் சிறப்பை,இவற்றுள், ‘வெல் போர்ச் செழியனும் வந்தனன் எதிர்ந்த வம்ப மள்ளரோ? பலரே பகல் தவச் சிறிதே; அதனால் எஞ்சுவர் கொல்லோ?’ என்பதுபோல மிகச் செறிவோடு எடுத்துக்