பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

புறநானூறு - மூலமும் உரையும்



வறிதுநிலைஇய காயமும், என்றாங்கு - அவை அளந்து அறியினும், அளத்தற்கு அரியை, 5

அறிவும், ஈரமும், பெருங்கணோட்டமும்,

சோறுபடுக்கும் தீயோடு

செஞ் ஞாயிற்றுத்தெறல் அல்லது பிறிதுதெறல் அறியார் நின் நிழல்வாழ்வோரே, - திருவில் அல்லது கொலைவில் அறியார், 10

நாஞ்சில் அல்லது படையும் அறியார், திறனறி வயவரொடு தெய்வர் தேய, அப் பிறர்மண் உண்ணும் செம்மல்; நின்நாட்டு வயவுறு மகளிர் வேட்டு உணின் அல்லது பகைவர் உண்ணா அருமண் ணினையே; 15

அம்பு துஞ்சும் கடி அரணால், அறம் துஞ்சும் செங்கோ லையே; புதுப்புள் வரினும், பழம்புள் போகினும், விதுப்புற அறியா ஏமக் காப்பினை, அனையை ஆகல் மாறே, 20 மன்னுயிர் எல்லாம் நின்அஞ் சும்மே.

4.

சேரர் பெருமானே! கடலாழமும், நிலப்பரப்பும், காற்றியங்கு திசையும், விரிந்த வானும் ஆகியவற்றை வரையறுத்து அறிந்தாலும், நின் அறிவும் அன்புக் கண்ணோட்டமும் அளவிட்டுக் கூறுவதற்கு அரியன. நின் குடைவாழ்வோர் சோறாக்கும் நெருப்புடனே, செஞ் ஞாயிற்றின் வெம்மையுமன்றிப், போர் வறுமை ஆகிய வெம்மைகளை அறியார்; பகைவர் மண்ணைக் கைப்பற்றி வாழும் தலைவனே! நின் மண்ணைக் கருவுற்ற பெண்டிர் மசக்கையால் உண்பாரே அன்றிப் பகைவர் ஒருபோதும் கைக்கொள்ளார். அத்தகைய அரிய நாடும், காவல் மிகுந்த அரணும், அறம் நிறம்பிய செங்கோன்மையும் உடையவனே! தீய நிமித்தமாகப் புதுப்புள் வரினும் பழம்புள் போயினும் நடுங்காத காவல் உடையது நின் நாடு. அதனால், உலக உயிர் அனைத்தும், நினக்குத் துயரம் நேருமோ எனத் தத்தம் காதலால் நினக்காக அன்புடன் அஞ்சுகின்றன. (இவ்வாறு, 'அனைவர் உள்ளமும் நிறைந்தவன் நீயன்றோ எனப் புகழ்கிறார் புலவர்)

சொற்பொருள்: 1. குட்டம் - ஆழம்.10. திரு வில் இந்திர வில். 14 வயவு உறு. மகளிர் கருப்பமுடைய பெண்டிர்; அவர் மண்ணையும் புளியையும் சாம்பரையும் சுவைத்துண்டல் இன்றும் இயல்பு என்பர்.