பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/420

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

408

புறநானூறு - மூலமும் உரையும்


துயிலமர் போயே (நற் 121) எனப் பாடிய சிறப்பினால், ஒரு சிறை' எனப் பெயர் பெற்றனர் போலும் பெரியன் தகுதிபற்றி அமைந்த பெயர்.

ஒரூஉத்தனார் 275

பகைப் படையை ஊடறுத்துச் சென்று தன் தோழனைக் காக்க முயல்கின்ற மாவீரன் ஒருவனின் செயலை வியந்து போற்றுகின்றது செய்யுள். அவன் சென்ற விரைவினைக் கன்றமர் கறவை போல’ என நயமுடன் கூறுகின்றார் இவர்.

ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் 71

புதுக்கோட்டைச் சீமையைச் சார்ந்த ஒலியமங்கலம் அக் காலத்தே ஒல்லையூர் என வழங்கிற்று. அதன் தலைவனை வென்ற சிறப்பினால் இவர் இப்பெயர் பெற்றனர் ஆகலாம். பூதப் பாண்டியன் இவர் பெயர். தென் பாண்டிப் பகுதியிலுள்ள 'பூதப் பாண்டி’ என்னும் ஊர் இவ்வரசனது நினைவாக எழுந்ததாகலாம். இவர் களத்தில் வென்றாலும், பெரும்புண்பட்டு உயிர் துறக்க, இவர் மனைவியான பெருங்கோப்பெண்டு சான்றோர் தடுத்தும் அவரை மறுத்துக் கூறித் தீப் பாய்ந்தனள். இதனை அவள் செய்யுட்கள் காட்டும். பொதியிற் செல்வன், பொலந்தேர்த் திதியன், இன்னிசை இயத்திற் கறங்கும் கன்மிசை யருவிய காடு (அகம்.5) என, இவர் அழகுறப் பாடுகின்றனர். இவர் நண்பர்கள் 'வையை சூழ்ந்த வளங்கெழு வைப்பின், பொய்யா யாணர் மையற் கோமானும், மாவனும், மன்னெயில் ஆந்தையும், உரைசால் அந்துவஞ் சாத்தனும், ஆதன் அழிசியும், வெஞ்சின இயக்கனும் உள்ளப்படப் பிறரும் ஆவர். இவர் கூறும் வஞ்சினம் இவரது மறமாண்பையும், காவற் சிறப்பையும் புலப்படுத்தும். ஓரம்போகியார் 284

ஐங்குறு நூற்றுள் மருதம் பற்றிய நூறு செய்யுட்களையும் கனிந்த கனிச்சுவையொடு பாடியவர் இவர் மற்றும் அகநானூற்று 286, 316 ஆம் செய்யுட்களையும், குறுந்தொகையின் 10, 70,122, 127, 384 ஆம் செய்யுட்களையும், நற்றிணையின் 20, 360 ஆம் செய்யுட்களையும் செய்தவர் இவர். 'பெரியோர் ஒழுக்கம் பற்றிய விளக்கமாக இவரது அகநானூற்றுச் செய்யுள் விளங்குகின்றது. (286) ஆதன் எழினி,அவினி,சோழன் கடுமான் கிள்ளி, பாண்டியன், மத்தி, சிரா அன் என்னும் தலைவர்களையும் இவர் பாடியுள்ளனர். ஐங்குறு நூற்றுச் செய்யுட்களுள் வேட்கைப்பத்துச் செய்யுட்கள் ஒவ்வொன்றும் சிறந்த பல சொற்றொடர்களைக் கொண்டு விளங்குகின்றன. "நெற்பல பொலிக, பொன் பெரிது சிறக்க'; 'விளைக வயலே, வருக இரவலர்', 'பால் பல ஊறுக'; படுக பல