பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/423

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன் 411 இவர் அருளியனவாகத் தொகை நூற்களுள் காணப்படுவன. 278 செய்யுட்கள். குறிஞ்சித் திணைச் செய்யுட்கள் செய்வதில் மிகுதியான ஈடுபாடு கொண்டவர். ஆதலால் இவருடைய செய்யுட்கள் பலவும் அகத்திணைச் செய்யுட்களாகவே காணப் படும். கபில முனிவர், தொல் கபிலர், கபிலதேவ நாயனார் ஆகியோர் வேறு; இவர் வேறு. ஆரிய அரசன் பிருகதத்தனுக்குத் தமிழினிமையை எடுத்துக் கூறுமாற்றால் குறிஞ்சிப் பாட்டைச் செய்தவர் இவர். இவராற் பாடப் பெற்றோர் அகுதை, இருங்கோவேள், ஓரி, செல்வக் கடுங்கோ வாழியாதன், சேரமான் மாந்தரஞ் சேரல் இரும்பொறை, நள்ளி, மலையமான் திரு முடிக்காரி, மலையன், விச்சிக்கோன், வையாவிக் கோப்பெரும் பேகன், வேள் பாரி என்போராவர். இவர்களுள், பாரியின் பண்பைப் பற்றி இவர் பாடிய பாடல்களே மிகுதியானவை. அவை, இவரது சால்பையும், பாரி வள்ளலது சால்பு மிகுதியையும் தமிழகத்தே என்றும் நிலைக்குமாறு நிலைபெறச் செய்தவை ஆகும். இவருடைய வரலாறு மிகவும் விரிவானது. பாரிக்குப்பின் பாரி மகளிர்க்குத் தாமே தந்தையெனும் பொறுப்பினை ஏற்று அவர்களை நல்லவாழ்வில் அமைக்க இவரடைந்த துயரங்கள் பல. முடிவில், அவரைப் பார்ப்பார்பால் அடைக்கலமாக ஒப்பித்து விட்டுத் தாமும் வடக்கிருந்து உயிர்நீத்துத் தம் நண்பனான பாரியுடன் சென்று சேர்ந்தவர் இவர் மூவேந்தரும் வஞ்சகமாகப் பாரியைக் கொன்றது கண்டு, உள்ளம் வெதும்பி வெதும்பி இவர் பாடிய செய்யுட்கள், நம்மையும் சோகக் கடலுட் செலுத்துவன வாகும். சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன், இவருடைய பத்துச் செய்யுட்களையும் கேட்டு அளவிறந்த களிப்பு அடைந்தான். அவன் அளித்த பரிசில், நூறாயிரம் காணம் பொன்னும், நன்றா என்னும் குன்றேறி நின்று தன் கண்ணிற் கண்ட நாடெல்லாமும் ஆம். எனினும், அவற்றைத் தாமும் பிறருக்கு நல்கி இன்புற்று, மீண்டும் பரிசிலராகவே வாழ்ந்தவர் இவர். இவருடைய குறிஞ்சிப் பாட்டும், குறிஞ்சிக் கலிச் செய்யுட்களும், இயற்கை வளத்தையும், குறிஞ்சித் திணை ஒழுக்கத்தையும் எழிலுறக் காட்டுகின்றன. அன்றியும், சிறந்த பொருட் செறிவு கொண்ட பல தொடர்களையும் அவை தம்முட் கொண்டவையாக விளங்குகின்றன. கயமனார் 254

அகநானூற்றுள் 12; குறுந்தொகையுள் 4, நற்றிணையுள் 6: ஆகியவை இவர் செய்த பிற செய்யுட்கள். பாசடை நிவந்த கணைக்கால் நெய்தல், இனமீன் இருங்கழி ஒதம் மல்குதொறும், கயமூழ்கு மகளிர் கண்ணின் மானும்'(குறு, 9) எனக் கூறிய உவமைநயம் பற்றி இப் பெயர் பெற்றனர் என்பர். ‘அன்னி