பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/425

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

413


பலியிட்டுப் போற்றும் அந் நாளைய வழக்கத்தை இவரது நற்றிணைச் செய்யுள் காட்டுகின்றது. இவ்வாறே, 'தெய்வஞ் சேர்ந்த பராரை வேம்பிற் கொழுப்பா எறிந்து, குருதி தூஉய்ப் புலவுப் புழுக்கு உண்ணும் பண்டை மறவர்களையும் இவரது அகநானூற்றுச் செய்யுள் நமக்குக் காட்டுகின்றது.

கருவூர்ப் பெருஞ்சதுக்கத்துப் பூதநாதனார் 291

கோப்பெருஞ் சோழன் வடக்கிருந்த காலத்து அவனைப் பாடிய செய்யுள் இதுவாகும். அவனால் ஆதரிக்கப்பெற்று, அவன்பால் அன்பு கொண்டு, அவன் வடக்கிருந்து உயிர் துறந்த காலத்து, அவனோடு தாமும் வடக்கிருந்து உயிர் நீத்த பலருள் இவரும் ஒருவர் எனலாம். சதுக்கப் பூதத்தின் பெயரைக் கொண்டவர் இவர். சதுக்கப் பூதத்தைப் பற்றிச் சிலப்பதிகாரம் விளக்கமாகக் கூறுவது காண்க. கல்லாடனார் 23, 25, 371, 385, 391

அகநானூற்று 9, 83, 113, 171, 199, 209, 333 ஆம் செய்யுட்களையும், குறுந்தொகை 260, 269 ஆம் செய்யுட்களையும் செய்தவர் இவர். 'கல்லாடம் என்னும் ஊரினர் இவராகலாம். தொல்காப்பிய உரையாசிரியரான கல்லாடரும், 'கல்லாடம்’ என்னும் நூலை இயற்றியோரும் இவரினும் வேறானவர் ஆவர். பதினோராம் திருமுறையுள் வரும் திருக்கண்ணப்ப தேவர் திருமறத்தைச் செய்தவர் மற்றும் ஒரு கல்லாடர் ஆவர். இவ்வூர் எந்தப் பகுதியில் உள்ளதென்று தெரியவில்லை. 'கல்லாடத்துக் கலந்து இனிது அருளி என வரும் மணிவாசகர் திருவாக்கால், அது ஒரு புகழ்பெற்ற சிவத்தலமாகும் என்று கருதலாம். பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின் புகழை இவர் விளங்கப் பாடியுள்ளார். அவன் காலத்துப் பெருமக்களோடு பெரு நட்புப் பூண்டு, செழுந்தமிழ் வளர்த்த சீரியோர் இவர் என்று அறிதல் வேண்டும். பிரிந்து சென்றானாகிய தலைவன், தன் நெஞ்சம் தலைவியையே நினைந்து வருந்தி, அது சென்று 'அவளைத் தழுவியதோ எனக் கூறுவதாக விளங்கும் செய்யுள் (அகம்.9) இவரது புலமைத் திறத்தையும், காதலர்களது உளத்தன்மையையும் நன்கு காட்டுவனவாகும். புல்லியது வேங்கடத்தைப் பற்றியும், கோசர்களது நெய்தற் பகுதி நன்னாடு பற்றியும், பாணனது நன்னாட்டைப் பற்றியும், களங்காய் கண்ணி நார்முடிச்சேரல் வாகைப் பறந்தலைப் போரில் நன்னனைக் கொன்றழித்தது பற்றியும், முள்ளுர் மன்னனான காரி, கொல்லிக் கோமானானா ஓரியைக் கொன்று, அவன் நாட்டைச் சேரலர்க்கு ஈத்தது பற்றியும், கொல்லிப் பாவையின் நலன் பற்றியும், தொண்டையரைப் பற்றியும், நெடுஞ்செழியனின் போராண்மை