பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/429

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

417


என்னும் வாக்கிலேதான் எவ்வளவு நயப்பாடும் பொருட்செறிவும் விளங்குகின்றன! ஈத்து உவக்கின்ற பண்பு உடையவர்கள் மலிந்திராத இவ்வுலகத்துத் தன்மை இவரைப் பெரிதும் வருத்தியிருக்கிறது. பலரையும் பாடிப் போற்றி, யாதும் பெறாதே நொந்து வாடி மெலிந்திருக்கின்றார் இவர். இந்தச் சோர்வும் ஏக்கமும் பிட்டங்கொற்றனைப் பாடும்போது வெளிப்படுகின்றன. 'ஈவோர் அரிய இவ்வுலகத்து, வாழ்வோர் வாழ, அவன் தாள் வாழியவே (புறம் 171), என்று வாழ்த்துகின்றார் இவர். காரிக்கண்ணனார் என்னும் பெயருக்குப் பலர் பலவகையாக விளக்கந் தருவார்; ஆயின், கருமைப் பொலிவு மிகுதியாகப் பெற்றிருந்த கண்களை உடைமையினாலே இப் பெயர் இவருக்கு அமையலாயிற்று எனக் கொள்ளுதலே பொருத்தமாவது ஆகும்.

குடபுலவியனார் 18, 19

இவர் போர்க்களத்து ஆற்றலைப் பாடுவதில் மிகவும் வல்லவராக விளங்கியவர். இவராற் பாடப்பெற்றோன் பாண்டியன் நெடுஞ்செழியன் ஆவான். ‘தலையாலங்கானத்து எழுவர் நல்வலம் கடந்தோய்’ என் வருவதனால் (புறம்.19), இவன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனே எனலாம். அவனுக்கு அறநெறி உணர்த்துவாராக, உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தேரே ‘உண்டி முதற்றே உணவின் பிண்டம், உணவெனப்படுவது நிலத்தொடு நீரே, நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு உடம்பும் உயிரும் படைத்திசினோரே (புறம்.18), என்று, ஒர் அரசு மேற்கொண்டு பேணவேண்டிய முதற் கடமையை வலியுறுத்துகின்றார் இவர். மாங்குடி மருதனார், நக்கீரனார் போன்ற பெரும் பேராசிரியன்மாரின் காலத்து விளங்கிய இவர், குடபுலத்திலிருந்து வந்து, மதுரைச் சங்கத்தே வீற்றிருந்து தமிழாய்ந்து வந்தமையால் இப் பெயரைப் பெற்றனர் போலும். குடிவாயிற் கீரத்தனார் 242

அகநானூற்றுள் 10; குறுந்தொகையுள் 3; நற்றிணையுள் 4; ஆக 17 செய்யுட்களுடன், இச் செய்யுளையும் செய்தவர் இவர். குடவாயில் சோணாட்டுள்ள ஓர் ஊர். தேர்வண் சோழர் குடந்தை வாயில் (நற்) என இவரே அதனை உரைப்பர். ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன் இறந்த பின்பு, அவன் பிரிவுக்கு இரங்கியவராக இவர் செய்துள்ள இச் செய்யுள் மிகவும் உருக்கமானது ஆகும்,'முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே' என்று வெதும்புகின்றார் இவர். பாலைத்திணைப் பாடல்களைச் சுவையோடு பாடியுள்ளவர் இவர். தாய் மகளைக் கடுமையான காவலுக்கு உட்படுத்துவாள் என்பதனை, "கொற்றச் சோழர் குடந்தை வைத்த, நாடுதரு நிதியினும் செறிய, அருங்கடிப்