பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

μαθμüά Φαθαά . 31 21. புகழ்சால் தோன்றல்!

- பாடியவர்: ஐயூர் மூலங்கிழார். பாடப்பட்டோன்:

கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி. திணை: வாகை. .

துறை: அரசவாகை.

(கானப்பேரெயில் மீட்டற்கு அரிதென்றான் வேங்கை மார்பன். அவனுரையைப் பொய்ப்படுத்து, அதனை மீட்டுச் சிறப்புற்றான் இவ் வழுதி. இகழுநர் இசையோடு மாயப் புகழொடு விளங்கிப் பூக்க நின் வேல்' என்று வாழ்த்துகின்றார் புலவர்)

புலவரை இறந்த புகழ்சால் தோன்றல்! - - நிலவரை இறந்த குண்டுகண் அகழி, வான்தோய் வன்ன புரிசை, விசும்பின் மீன்பூத் தன்ன உருவ ஞாயில், கதிர்நுழை கல்லா மரம்பயில் கடிமிளை, 5

அருங் குறும்பு உடுத்த கானப்பேர் எயில், கருங்கைக் கொல்லன் செந்தீ மாட்டிய இரும்புஉண் நீரினும், மீட்டற்கு அரிதுஎன, வேங்கை மார்பன் இரங்க, வைகலும் ஆடுகொளக் குழைந்த தும்பைப், புலவர் 10

பாடுதுறை முற்றிய கொற்ற வேந்தே! இகழுநர் இசையொடு மாயப் 争 புகழொடு விளங்கிப் பூக்க, நின் வேலே!

புலவர் பாடுவதற்கும் அருமையான புகழ்மிகுந்த தலைவனே! பாதலத்தை எட்டுவது போன்ற ஆழமான அகழி நாற்புறமும் சூழ்ந்திருக்க, வானை முட்டுவது போன்ற உயரமான மதிலுடன் கானப்பேரெயில் முன்னர் விளங்கியது. மீன்பூத்த வான்போன்ற சூட்டினையும், வுெயில் நுழையாத காவற் காட்டினையும், சூழ நெருங்குவதற்கரிய சிற்றரண்களையும் உடைத்தாயிருந்ததும் அது. 'கொல்லனின் உலைக் களத்திலே காய்ச்சிய இரும்பு உண்ட நீர் மீளாது; அது போன்று வழுதி கைப்பற்றிய என் கானப்பேரெயிலை மீட்பதும் அரிதாம் என, அவ் வல்லரணுக்குரியவேங்கை மார்பன் வருந்தும்படியாக, நாடோறும் வெற்றிமேல் வெற்றியாகப் பெற்றுச் சிறந்தாய். புலவர் பாடும் புறத்துறை யெல்லாம் செயலிலே முடித்த வெற்றி வீரனே! நின்னை மதியாத பகைவருடைய புகழ் முழுவதும் கெடுவதாக! நின் கைவேல், வெற்றிப் புகழுடன் என்றும் மிளிர்வதாக

சொற்பொருள்: 1. புல வரை - பாடுவாரது அறிவின் எல்லை. 4. ஞாயில் கோட்டைக்கண்ணுள்ள ஏவறை.5 மிளை-காவற்காடு. 10. ஆடு கொள வெற்றி கொள்ள.