பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/431

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

419


தாயம் - உரிமை; தாயனார் உரிமை உடையவர். கணவனைக் களத்திலே இழந்துவிட்டாளான மறக்கடி இளமகள் ஒருத்தியின் துயரமிகுதியை உருக்கத்துடன் புலப்படுத்துகின்றது இவரது செய்யுள். எழாஅ நெற் பைங்கழை பொதி களைந் தன்ன விளர்ப்பின், வளையில் வறுங்கை ஒச்சிக், கிளையுள் ஒய்வளோ கூறுநின் உரையே எனக் கேட்கின்ற அவலக்குரலின் ஏக்கம், நம் உள்ளத்தினும் எதிரொலிப்பதாகும்.

குறமகள் இளவெயினியார் 157

இவருடைய பெயரின் அடை, இவரைக் குறக்குலத் தலைவன் ஒருவனின் மகளெனக் காட்டுவதாகும். இதனாற் பண்டைத் தமிழகத்தே வாழ்ந்த குறக்குடியினரும் சிறந்த கல்விநலமும் பண்புச் செவ்வியும் உடையவராக விளங்கினர் என்பதும் விளங்கும். அவர் மகளிரே சிறந்த செய்யுள் செய்யும் அளவிற்குப் பெரும் புலமைபெற்று விளங்கினர் எனலாம். நற்றிணையின் 357 ஆம் செய்யுளைச் செய்தவரான குறமகள் குறியெயினியாரும் இதனை வலியுறுத்துஞ் சான்றாவர். இவர் ஏறைக்கோன் என்னும் தம் குலத் தலைவனது தலைமைச் சிறப்பை வியந்து பாடுகின்றார். 'நூம்மோர்க்குத் தகுவன அல்ல என்று இவர் கூறுவதனால், சிலர் ஏறைக்கோனின் தகுதியைப் பற்றிக் குறைகூறப் பெறாத இவர், அவருக்கு அறிவு கொளுத்துவாராகத் தம் தலைவனின் பெருமையை எடுத்து உரைக்கின்றனர் எனலாம். -

குறுங்கோழியூர் கிழார் 17, 20, 22

இவர் வேளாண் குடியினர். 'கோழி என்பது உறையூரைக் குறிப்பது. 'குறுங்கோழியூர் என்பது அதனைச் சார்ந்து விளங்கிய ஒரு பகுதியெனக் கூறலாம். இவராற் பாடப்பெற்றோன் சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்பவனாவன். இவ் இரும்பொறையனது ஆட்சி சிறப்பை வியந்து மிகமிக அருமையாகப் பாடியுள்ளார். இவர். பாண்டியன் தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனால் சிறைப்படுத்தப் பட்டிருந்த இவன், தப்பிச் சென்று, மீண்டும் அரசு கட்டிலில் அமர்ந்து சிறப்பெய்தினான் என்பர். ஐம்பூதங்களின் திறனை அளந்து அறிந்தாலும் நின் திறனை அளந்து அறிவாரில்லை; நின் நிழலில் வாழ்வோர். 'திருவில் அல்லது கொலைவில் அறியார்; நாஞ்சில் அல்லது படையும் அறியார் நின்னாட்டு வயவுறு மகளிர் வேட்டு உணின் அல்லது, பகைவர் உண்ணா அரு மண்ணினை, அம்பு துஞ்சும் கடியரணால் அறம் துஞ்சும் செங்கோலையே’ எனவெல்லாம் போற்றுகின்றார் இவர். நிற் பாடிய வயங்கு ‘செந்நாப் பிறரிசை நுவலாமை ஒம்பாது ஈயும் ஆற்றல் எங்கோ என இவனது கொடை மேம்பாட்டையும் கூறுகின்றார். இதனால்