பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/432

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

420

புறநானூறு - மூலமும் உரையும்


இவனது மறமும் அறமும் அருளும் ஒருங்கே நிலவிய உயர் நிலையை நாம் அறிந்து இன்புறலாம். குன்றுர் கிழார் மகனார் 338

இச் செய்யுளையும் நற்றிணையும் 332 ஆம் செய்யுளையும் பாடியவர் இவர். இவராற் பாடப்பெற்றோன் யாவன் என அறியுமாறில்லை. ஆனால், கன்னியின் பேரெழிலுக்கு நெடுவேளா தனின் போந்தை நகரத்து எழில் வளத்தை உவமித்தலால் அவனைப் பாடினரெனவும் கொள்வர். ‘ஓர் எயிலே உடையானாகிய ஒரு மன்னன், தன் மடமகளைத் தன்னை வணங்கார்க்கு ஈகுவன் அல்லன், எனக் கூறி, அவனது பெருமையுைம், அவன் மகளது எழிலையும், அவனைத் தர மறுத்தலால் வரும் போரையும் நம் கண்முன் நிறுத்துகின்றார் இவர். ‘குன்றுார்’ என்னும் ஊர்கள் தமிழகத்துப் பலவாகும். ‘போந்தை' என்னும் பெயரையும் பிறவற்றையும் கருதினால், இவ்வூர் சேரநாட்டுப் பழையவூர்களுள் ஒன்றெனக் கருதலாம்.

கூகைக் கோழியார் 364

மயானத்துள்ள பழைய மரப் பொந்துகளிலிருந்து பிறர் அஞ்சுமாறு குரலெழுப்பும் கூகைக்கோழியைப் பற்றிக் குறிப்பிட்ட நயத்தினைக் கருதி, இவரை இவ்வாறு குறிப்பிட்டனர். இவர் இயற்பெயர் தெரிந்திலது."எரிமருள்தாமரைப் பெருமலர்' என்பது சுவையான உவமையாகும். 'செத்தால் அநுபவிப்பது அரிது; அதனால் உண்டும் தின்றும் இரப்போர்க்கு ஈந்தும் மகிழ்தும் வம்மோ என ஒரு தலைவனை அழைத்து, அவனுக்கு நிலையாமையைக் கூறி, அறநெறியில் நிற்குமாறு அறிவுரை கூறுகின்றார் இவர். - கூடலூர் கிழார் 229

இவர் மலைநாட்டுக் கூடலூரைச் சேர்ந்தவர். கோச் சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறையைப் பாடியவர். அதனாற் குறுங்கோழியூர் கிழாரும் இவரும் ஒரு காலத்தவர் எனலாம். குறுந்தொகையுள் 166, 167, 214 ஆம் செய்யுட்களைப் பாடியவரும் இவரே. மாந்தைப் பட்டினத்தின் வளமை (குறு.166); தன் கணவன் தான் துழந்தட்ட தீம்புளிப்பாகரை இனிதென உண்டலைக் கண்டு, அடுக்களைப் புகை படிந்த கண்களோடும், கழாது உடுத்த கலிங்கத்தோடும் நின்றுகளிக்கும் இல்லுறை தெய்வத்தின் மேம்பாடு (குறு 167) ஆகியவற்றை இனிதாகக் காட்டுபவர் இவராவர். ஐங்குறு நூற்றை இவ் இரும்பொறையின் வேண்டுகோட்கு இணங்கத் தொகுத்தவரும் இவராவர். ஒரு விண்மீன் வீழ்ச்சியைக் கண்டு இன்ன நாளில்