பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/433

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

421


சேரமான் இறப்பான் எனக் கணக்கிட்டு, அது தவறாது அவன் இறக்கவும் அது குறித்து இரங்குவாராகப் பாடிய செய்யுள் (புறம்:229) இதுவாகும். இது இவரது சோதிடப் புலமையையும் காட்டுவதாகும். இன்றும் விண்மீனின் இறக்கங் காணல் தீமை பயக்கும் என்று கூறுவ்ர். இந்த நம்பிக்கை பண்டும் நிலவியதென இதனால் அறிகின்றோம். ங்அளந்து கொடை அறியா ஈகை, மணி வரையன்ன மாஅ யோனே' என்று இரும்பொறையைப் போற்றுகின்றார் இவர்.

கோடை பாடிய பெரும்பூதனார் 258

இவரது இயற்பெயர் பூதனார் என்பது பெருமை இவரது பருவத்தையும், கோடை பாடிய' என்பது இவர் பெரிதும் பாடிய செய்யுட்களின் இயல்பையும் காட்டுவனவாகும்.'முருகக் கடவுளது ஆவேசங் கொண்ட மகளிர் துள்ளியாடுவது போல் மான் தாவித் துள்ளும் என்று கூறுகின்ற இவரது வாக்குச் சிறந்த சொல்நயம் உடையதாகும். -

கோப்பெருஞ் சோழன் 214, 215, 216

குறுந்தொகையின் 20, 53, 129, 147 ஆகிய செய்யுட்களையும் பாடியுள்ளவர் இவர் என்று அறிகின்றோம். தன் காதலன் தன்னைப் பிரிந்ததற்கு வருந்திய ஒரு காதலி பாடியதாக அமைந்துள்ள இவரது செய்யுள் (குறு.20) இவரது புலமைச் சிறப்பை நன்கு காட்டுவதாகும். பேரரசனாகவும், அதே சமயத்தில் பெரும் புலவராகவும் பெருவள்ளலாகவும் திகழ்ந்தவர் இவர். காதலியது நெற்றிக் கவினுக்குக் கடல் நடுவே தோன்றும் நிலவை உவமித்திருப்பது பெரிதும் இன்புறற்கு உரியதாகும் (குறு.129). பிசிராந்தையாரின் பேரன்பைப் பாராட்டிய இவரது செய்யுள், இவரது உள்ளச் சால்பை நன்கு விளக்கும். செல்வக் காலை நிற்பினும், அல்லற் காலை நில்லலன் என்று கூறும் உறுதியும், அது அவ்வாறே வாய்த்ததும், பெரிதும் வியத்தற்குரியனவாகும். வாழ்வின் குறிக்கோளை வரையறுத்தாராக இவர் கூறிய செய்யுள், இவரது தெளிந்த மனத்தியல்பை நமக்கு விளக்கும் (புறம் 214). இத்தகைய தமிழ்ச் சான்றோர் ஆட்சி நடாத்தியதனாலேதான் புறநானூற்றுக் காலத்தே செந்தமிழ் நலம் சிறப்புற்று ஓங்கியது என்றும் நாம் அறிதல் வேண்டும். கோவூர் கிழார் 31,32,33, 41,44, 45,46, 47, 68, 70, 308, 373, 382, 386, 400 -

இவர் வேளாண் மரபினர்; கோவூரைச் சார்ந்தவர். சோழவரசர்களால் பெரிதும் போற்றப் பெற்றவர். 'நீ வருதலும் உண்டென்று அலமந்து, நெஞ்சு நடுங்கு அவலம் பாயத் துஞ்சாக்