பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/434

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

422

புறநானூறு - மூலமும் உரையும்


கண்ண வடபுலத் தரசே எனச் சோழன் நலங்கிள்ளியின் வெற்றிச் சிறப்பு வடநாட்டாரையும் கதிகலங்கச் செய்வதாயிருந்த செய்தியை இவர் கூறுகின்றார் (புறம் 31). ஏழெயிற் கோட்டையை வென்ற நலங்கிள்ளியது வெற்றிச் சிறப்பையும் (33) இவர் பாடியுள்ளார். சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனைப் பாடுவாராகக் காலனும் காலம் பார்க்கும்; பாராது, வேலீண்டு தானை விழுமியோர் தொலைய, வேண்டிடத்து அடுஉம் வெல்போர் வேந்தே என, அவனது மறமேம்பாட்டை உரைக்கின்றார். சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தான் ஆவூரை முற்றியிருந்த காலத்து, அடைத்திருத்த நெடுங்கிள்ளியை நோக்கி, 'அறவை ஆயின் நினது எனத் திறத்தல்; மறவை ஆயின் போரொடு திறத்தல் வேண்டும் என வற்புறுத்தும் இவரது செய்யுள், இவரது பண்பையும் இவரது பெருமையையும் காட்டுவதாகும். சோழன் நலங்கிள்ளி உறையூரை முற்றுகையிட்டிருந்தான்; உள்ளே அமைந்து அடைந்திருந்தான் நெடுங்கிள்ளி; இருவரது பகைமையையும் எள்ளுவாராக இவர் பாடிய செய்யுள் மிகவும் திட்பஞ் செறிந்ததாகும். 'குடிப்பொருள் அன்று நும் செய்தி' என்று இடித்துரை பகரும் மனவலியும், சால்பும் இவரிடம் விளங்கியமை காண்கிறோம். எந் நிலையினும் தமிழறிந்தாரைப் போற்றும் தமிழரசரின் பண்பையும் அது கேட்டுப் பகைவிட்டு நட்புப் பூண்ட அவ்வரசரது நிலைமை காட்டுவதாம். மலைய மானின் மக்களை யானைக்கு இடுங்காலத்துப் பாடி உய்யக் கொண்ட செய்யுளும், இளந்தத்தனைக் காத்தற்குப் பாடிய செய்யுளும், அரசரும் தவறிய காலத்து அவருக்கு அறநெறி காட்டி அவரைத் திருத்தும் இவருடைய உயர்வையும், அவ்வரசருக்கு இவர் பாலிருந்த நன்மதிப்பையும் காட்டுவனவாகும். சோழன் நலங்கிள்ளி, சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், சோழன் நெடுங்கிள்ளி, சோழன் குராப்பபள்ளித் துஞ்சிய கிள்ளிவளவன் என்னும் பல சோழகுல வேந்தரையும் இவர் பாடியுள்ளனர். இவருடைய செய்யுட்கள் வரலாற்று முதன்மை கொண்டவை; அத்துடன் அக் காலத்தைய புலவரது பெருமித நிலையை விளக்குபவையும் ஆகும்.

கோனாட்டு எறிச்சிலுர் மாடலன் மதுர்ைக் குமரனார் 54, 61, 167, 180, 197, 304

கோனாட்டு எறிச்சிலுரரினரான இவர் மதுரைக் கண்வீற்றிருந்து தமிழ்பாடிப் புகழ் பெற்றோர் ஆவர். இவராற் பாடப்பெற்றோர் சேரமான், குட்டுவன் கோதை, சோழன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி, ஏனாதி திருக்கிள்ளி, ஈர்ந்துார் கிழான் தோயன் மாறன், சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமா வளவன், சோழிய ஏனாதி