பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/436

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

424

புறநானூறு - மூலமும் உரையும்


அமைந்த செய்யுள் (287) அவனது மறமேம்பாட்டையும், உள்ளத் துணிவையும் காட்டும்.

சிறு வெண்டேரையார் 362

ஐயாதிச் சிறுவெண்டேரையார் (புறம் 363) என்பாரும் இவரும் ஒருவரே என்பர். இச் செய்யுளும் பெருங்காஞ்சிச் செய்யுளே ஆகும். f

சீத்தலைச் சாத்தனார் 59

இச் செய்யுளும், அகநானூற்றுள் ஐந்தும், குறுந்தொகையுள் ஒன்றும், நற்றிணையுள் மூன்றும் இவர் பாடியனவாக வழங்கும். சீத்தலை என்னும் ஊரினர் இவர் சாத்தனார். இவர் பெயர்; இது குடிப்பெயர். இன்னே வருதும் எனத் தெளிந்தோர், இன்னிள வேனிலும் வாரார்' என வருந்தும் தலைவியை இவர் மிகவும் அருமையாக நமக்கு அறிமுகப்படுத்துகின்றார் (229), பாண்டியன் சித்திர மாடத்துத் துஞ்சிய நன்மாறனைப் பாடிய இச் செய்யுளில் (புறம், 59) அவனைப், பகைவருக்கு, அவரை அழித்தலால் ஞாயிறு போன்றோனாகவும், இரவலருக்கு, அவரைக் காத்தலால் திங்கள் போன்றோனாகவும் உவமித்துப் பாடி இன்புறுகின்றனர் இவர். சொல்லழகும் பொருட்செறிவும் கொண்ட சிறந்த செய்யுள் இது. இவரே செங்குட்டுவனிடம் கண்ணகி மதுரையை எரித்த செய்தியைச் சொன்னவர்; மணிமேகலைக் காப்பியத்தையும் செய்தவர். .

சேரமான் கணைக்கால் இரும்பொறை 74

இவன் சோழன் செங்கணானோடு திருப்போர்ப் புறத்துப் பொருது, அவனாற் பிடிக்கப்பட்டுக் குடவாயிற் கோட்டத்துச் சிறையிற் கிடந்தவன். அவ்வேளை ஒருசமயம் நீர் வேட்கை மீதுரத் 'தண்ணிர் தருக எனக் கேட்டான். காவலரோ உடனே தராது பின்னர்ச் சிறிது பொழுது கழிந்ததும் தந்தனர். அதனைப் பெற்றும் உண்ணானாக இச் செய்யுளைச் சொல்லிக் கீழே வீழ்ந்தனன் என்பர். பெருநிலையில் வாழ்ந்தோனாகிய அவன், தன் நிலைமைக்கு வருந்திப் பாடிய இச்செய்யுள் அவனது பண்புச் செவ்வியை நன்கு காட்டுவதாகும். இச் சேரமானையும், இச் சோழனையும் பற்றிய பிற செய்திகள் யாதும் கிடைத்தில. இவனைச் சிறைமீட்கப் பாடிய செய்யுட்களே பொய்கையாரின் களவழி நாற்பது' என்பதும் கூறப்படுகின்றது. பழங்குறிப்பு இவன் துஞ்சியதாகக் கூறுகின்றது. . சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை 245

கணவனைப் பிரிந்த மனைவியின் துயரம் பெரிது. அதனைப் பலரும் பாடியுள்ளனர். இவனே தன் தேவியின் மறைவுக்கு