பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

புறநானூறு - மூலமும் உரையும்


22. ஈகையும் நாவும்!

பாடியவர்: குறுங்கோழியூர் கிழார். பாடப்பட்டோன்: சேரமான் யானைக்கட் சேஎய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை, . திணை: வாகை. துறை: அரச வாகை.

("நிற் பாடிய அலங்கு செந்நாப், பிற்பிறர் இசை நுவலாமை, ஒம்பாது ஈயும் ஆற்றல் எங்கோ (31-33) என இவனது சிறப்பை ஆசிரியர் கூறுகின்றார். 'வாழிய பெரும நின் வரம்பில் படைப்பே' என்றதனால் வாழ்த்தியலாகவும் கொள்ளப்படும். மீக் கூறு மன்னன் நிலம் என்னும் குறளுரையுள் (386), "மீக் கூறுதலாவது, இவன் காக்கின்ற நாடு பசி பிணி பகை முதலியவை யின்றி யாவர்க்கும் பேரின்பந் தருதலின், தேவர் உலகினும் நன்று' என்றல்" என்பர் பரிமேலழகர். அதனையும் இங்கு நினைக்க)

தூங்கு கையான் ஓங்கு நடைய உறழ் மணியான் உயர் மருப்பின, பிறை நுதலாற் செறல் நோக்கின. பா வடியால் பணை எருத்தின, - தேன் சிதைந்த வரை போல 5

மிஞ்று ஆர்க்கும் கமழ் கடாஅத்து, அயறு சோரும் இருஞ் சென்னிய,

மைந்து மலிந்த மழ களிறு

கந்து சேர்பு நிலைஇ வழங்கப்;

பாஅல் நின்று கதிர் சோரும் 1O

வான் உறையும் மதி போலும்

மாலை வெண் குடை நீழலான், வாள்மருங்கு இலோர் காப்பு உறங்க, அலங்கு செந்நெற் கதிர் வேய்ந்த

'ஆய் கரும்பின் கொடிக் கூரை 15

சாறு கொண்ட களம் போல,

வேறுவேறு பொலிவு தோன்றக்

குற் றானா உலக் கையால்,

கலிச் சும்மை வியல் ஆங்கண்

பொலம் தோட்டுப் பைந்தும்பை 20 மிசை அலங்கு உளைய பனைப்போழ் செரீஇச், சின மாந்தர் வெறிக் குரவை

ஓத நீரில் பெயர்பு பொங்க;

வாய் காவாது பரந்து பட்ட

வியன் பாசறைக் காப் பாள! 25