பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/440

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

428

புறநானூறு - மூலமும் உரையும்


428 up5πεφπρι - εφευωρώ ε-κοσμιώ

தொண்டைமான் இளந்திரையன் 185

இவன் காஞ்சித் தொண்டைமான்களுள் ஒருவன். அரசனாகவும், வள்ளலாகவும், புலவனாகவும் திகழ்ந்தவன். நற்றிணையுள் 94, 99, 106 எனும் மூன்று செய்யுட்களையும் பாடியவன். பருவங்கண்டு ஆற்றாளாய தலைவியைத் தோழி பருவம் அன்று என்று வற்புறுத்துவதாக விளங்கும் செய்யுளில் (நற் 99). ‘பிடவமும் கொன்றையும் கோடலும் மடவ; ஆக்லின் மலர்ந்தன பலவே' என நயமாகப் பாடியுள்ளனர். இப் புறநானூற்றுச் செய்யுள் வாழ்விற்கான உறுதிப்பொருளைப் பற்றிக் கூறுவது. கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியுள்ள பெரும்பாணாற்றுப் படைக்குரிய பாட்டுடைத் தலைவன் இவனே. அதியமானுக்காக ஒளவையார் சென்ற தூதும் இவனிடத்தேதான் எனலாம். இளந்திரையம் என்னும் நூல் இவனால் இயற்றப் பெற்றது என்று இறையனார் அகப்பொருள் உரையுள் நக்கீரர் கூறுவர். இவன் பெயரால் ஊர் ஒன்று ஏற்பட்டது எனவும், அது திரையனால் செய்யப்பட்டது பற்றித் திரையனதுர் என வழங்கப் படுவதாயிற்று எனவும் நன்னூலின் உரையாசிரியருள் ஒருவரான மயிலைநாதர் கூறுவர்.

நக்கண்ணையார் 83, 84, 85

இவர் பெண்பாலர், பெருங்கோழி நாய்கன் மகள் இவள் எனவும் கூறுவர்.இவன் உறையூர்க்கண் பெருநிலையிலே விளங்கிய பெருங்குடி வணிகருள் ஒருவன் போலும். அன்றி நாய்கன்’ என்னும் பட்டம் பெற்ற அரசகருமப் பணியாளருள் ஒருவனாகவும் இருக்கலாம். இவர் தித்தனின் மகனான போர்வைக் கோப்பெருநற் கிள்ளி என்னும் சோழ குளத்து இளவரசனைக் கண்டு காதலித்து, அவனால் அக் காதல் ஏற்றுக்கொள்ளப்படாத நிலையிலும், அவனையே தம் தலைவனாகக் கொண்டு வாழ்ந்தவர் ஆவர் என்பர். அகநானூற்று 252 ஆம் செய்யுளும், நற்றிணையின் 19, 87, ஆம் செய்யுட்களும், இவர் பெயரால் வழங்கும். ‘பணிவார் கண்ணேனாகி, நோய் அட, எமியேன் இருத்தலை யானும் ஆற்றேன்’ எனவும், 'பெருங்குளம் காவலன் போல அருங்கடி அன்னையும் துயில் மறந்தனளே”எனவும், மரத்தில் தூங்கும் வாவற் பறவை பெருங்காட்டு நெல்லியம் புளிச்சுவையைக் கனவில் உண்டு இன்புறுவதுபோல’, எனப் பிரிந்துபோய் தலைவனைக் கனவிற் கண்டு மகிழ்ந்த தலைவி, தன் நிலையைத் தோழிக்கு உரைக்கின்றாள் எனவும், நயமாகச் செய்திகளைச் சொல்பவர் இவர். இப் புறப்பாட்டுக்கள் கிள்ளியின் மற்போரை மறைந்து நின்று கண்டு களித்தும், அவன் வெற்றியை விரும்பியும் நின்ற இவரது உள்ளக் கசிவை விளக்கிக் காட்டும்.